search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படகு கவிழ்ந்த இடத்தில் தேடுதல் பணி
    X
    படகு கவிழ்ந்த இடத்தில் தேடுதல் பணி

    ஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60-க்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்றுவெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த விபத்தில் முதல்கட்டமாக 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
    அமராவதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின்  வழியாக பாயும் கோதாவரி ஆற்றில் தற்போது  வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி வினாடிக்கு 5.13 லட்சம் கனஅடி தண்ணீர் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

    இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் அருகாமையில் கண்டி போச்சம்மா ஆலயத்தில் இருந்து பாப்பிகொன்டலு என்ற சுற்றுலாத்தலத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் கோதாவரி ஆற்றின் வழியாக 60-க்கும் அதிகமானவர்கள் ஆந்திர மாநில அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகில் இன்று சென்று கொண்டிருந்தனர்.

    மீட்பு படையினர் வந்த படகு

    இன்று பிற்பகல் ஆற்றுச்சுழலில் சிக்கிய அந்த கச்சுலூரு பகுதியின் அருகில் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் ஆற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்தவர்களில் 23 பேரை உயிருடன் காப்பாற்றி, கரை சேர்த்தனர்.

    மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 11 பேரின்உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இவ்விபத்து பற்றிய செய்தியை அறிந்த ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.
    Next Story
    ×