search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி கால்நடைகளை பார்வையிடும் காட்சி
    X
    பிரதமர் மோடி கால்நடைகளை பார்வையிடும் காட்சி

    உபியில் கால்நடைகள் நோய் தடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    உத்தரபிரதேசத்தில் கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
    லக்னோ:

    கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய் (எப்எம்டி), புருசெல்லோசிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசத்தில் தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த விழாவில் கலந்துக் கொள்ள மதுராவிற்கு மோடி வருகை தந்தார். அவரை உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொடுத்து வரவேற்றார்.

    நெகிழி சேகரிப்பு பெண்களுடன் உரையாற்றும் பிரதமர் மோடி

    பின்னர் அப்பகுதியில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த இடத்தில், மோடி குப்பைகளில் இருந்து  நெகிழிப் பைகளை எடுத்துக் கொண்டிருந்த நெகிழிப் பொருட்கள் சேகரிப்பு பெண்களை சந்தித்து பேசி,  அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.

    இதையடுத்து அங்கிருந்த கால்நடைகள் குறித்து அதிகாரிகளிடம்  பிரதமர் மோடி கேட்டறிந்தார். இவ்விழாவில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மதுரா தொகுதி எம்.பி ஹேமமாலினி பங்கேற்றனர்.

    இந்த விழாவில் தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் (என்ஏடிசிபி) மற்றும் தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் கால்நடை, சுற்றுலா மற்றும் சாலை கட்டுமானம் தொடர்பான உத்தரபிரதேச அரசின் 16 திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.





    Next Story
    ×