search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரில் ஹெல்மெட்டுடன் பியூஷ் வர்ஷ்னே
    X
    காரில் ஹெல்மெட்டுடன் பியூஷ் வர்ஷ்னே

    அபராதத்துக்கு பயந்து தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்

    ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுவிடும் என்கிற பயத்தில் தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டிச் செல்கிறார்.
    அலிகார்:

    மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.  இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    டெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் போதையில் இருந்ததாக போலீசார் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தார். இதேபோன்று பல சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் பியூஷ் வர்ஷ்னே என்பவர், கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி போலீசார் ரூ.500 அபராதம் விதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    பியூஷ் வர்ஷ்னே

    தற்போது பியூஷ் வர்ஷ்னே, தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘மீண்டும் அபராதம் செலுத்த வேண்டி வருமோ என்ற பயத்தில் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்’ என கூறினார்.

    இது குறித்து போலீசார் கூறுகையில்,  ‘ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக தன்னிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அந்த இளைஞரிடமிருந்து புகார் வந்துள்ளது. விசாரித்தபோது இது தவறாக நடந்தது தெரியவந்துள்ளது. இது கவனக்குறைவால் நடந்த ஒரு தவறாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×