search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசூத் அசார்
    X
    மசூத் அசார்

    மசூத் அசார், ஹபிஸ் சயீத், தாவூத் இப்ராகிம் உள்ளிட்டோர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

    மும்பை தொடர்குண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார், ஹபிஸ் சயீத், தாவூத் இப்ராகிம் மற்றும் சகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை மத்திய அரசு இன்று பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மும்பை தொடர்குண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார், ஹபிஸ் சயீத், தாவூத் இப்ராகிம் மற்றும் சகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை மத்திய அரசு இன்று  பயங்கரவாதிகளாக  அறிவித்துள்ளது.

    இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கான ஆதாரங்களை கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உள்பட 22 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

    மும்பை பயங்கரவாத தாக்குதல்

    மேலும் மும்பை தொடர்குண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார், ஹபிஸ் சயீத், துபாயில் தஞ்சம் அடைந்துள்ள ’நிழல் உலக தாதா’ தாவூத் இப்ராகிம் மற்றும் சகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை பயங்கரவாதிகளாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

    சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×