search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி
    X
    டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி

    டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம்- பாஜக

    அசாம் மாநிலத்தைப் போன்று டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும் என பாஜக கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள், பெயர்களை சேர்ப்பதற்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

    இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

    தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க, உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அசாம் என்ஆர்சி

    இந்நிலையில், அசாம் மாநிலத்தைப் போன்று டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும் என பாஜக கூறி உள்ளது.

    இதுபற்றி பாஜகவின் டெல்லி மாநில தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில்,  “டெல்லியில் நிலைமை மோசமடைந்து வருவதால் டெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது அவசியம் ஆகும். இங்கு நிரந்தரமாக தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அதனால் இங்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவோம்” என்றார்.
    Next Story
    ×