search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி மறைந்த அருண் ஜெட்லியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் காட்சி
    X
    பிரதமர் மோடி மறைந்த அருண் ஜெட்லியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் காட்சி

    மறைந்த அருண் ஜெட்லியின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

    மறைந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
    புது டெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லிக்கு கடந்த 9-ந்தேதி  உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 24ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி  உயிரிழந்தார்.  இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

    முன்னதாக அருண் ஜெட்லியின் மறைவு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘அருண் ஜெட்லி அரசியலில் ஜாம்பவான் ஆவார். இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராவார். அவரது மறைவு மிகுந்த மனவேதனையானது.



    ஜெட்லியின் மனைவி மற்றும் மகனிடம் எனது இரங்கலை தெரிவித்தேன். ஓம் சாந்தி. பாஜகவிற்கும், அருண் ஜெட்லிக்குமான பந்தம் பிரிக்கமுடியாத ஒன்று. அவசர காலங்களில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அவர் முன்னணியில் இருந்தார்,

    அவர் கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வெளிப்படுத்தக்கூடிய எங்கள் கட்சியின் மிகவும் விரும்பப்பட்ட முகமாக மாறினார்’ என கூறியிருந்தார். ஜி7 மாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.

    இதனையடுத்து இன்று காலை பிரதமர் மோடி, மறைந்த அருண் ஜெட்லியின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். 
    Next Story
    ×