search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ரூபாய் வீழ்ச்சி
    X
    இந்திய ரூபாய் வீழ்ச்சி

    9 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்த வார தொடக்கத்தில் டாலருக்கு நிகரான  இந்திய ரூபாய் மதிப்பு 71.65 ஆக இருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. கடந்த புதன்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.55 ஆக இருந்தது. நேற்று மேலும் 26 காசுகள் சரிந்து ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 81 காசுகள் என்ற நிலையில் இருந்தது.

    இந்நிலையில் இன்று ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்தது. இன்று காலை வர்த்தகத்தின்போது இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 22 காசுகள் சரிந்து, ரூ.72.03 என்ற  நிலையில் இருந்தது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது.

    சீனா நாட்டின் பணமான யுவான் மதிப்பில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி காரணமாக பங்குச்சந்தைகளில் இந்திய ரூபாய் உள்பட பெரும்பாலான நாணய மதிப்புகள் வீழ்ச்சி கண்டு உள்ளன.

    இந்திய பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள்படி சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.971 கோடி டாலர் அளவுக்கு தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். மேலும் சர்வதேச அளவில் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தவிர ஜப்பானிய யென்னிலும் முதலீடு அதிகரித்துள்ளது.

    அந்நிய முதலீடுகள் இந்திய பங்குசந்தையிலிருந்து வெளியேறியதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிடலாம்.

    Next Story
    ×