என் மலர்

  செய்திகள்

  மத்திய அரசு
  X
  மத்திய அரசு

  ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராணுவத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறையாக 5 நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  மத்திய பணியாளர் நலத்துறை, பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் குழந்தை பராமரிப்பு விடுமுறை இனி தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என விதிகளில் திருத்தம் செய்தது. இந்த விதிகள் ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் பொருந்தும் என ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

  ஏற்கனவே 40 சதவீதம் வரை மாற்றுத்திறனுடன் 22 வயது வரை உள்ள குழந்தைகளை பராமரிக்க பெண்களுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு வழங்கப்பட்டது. இனி 40 சதவீதம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை (வயது வரம்பில்லாமல்) பராமரிக்க பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் 5 நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என ராணுவ அமைச்சக அதிகாரி கூறினார்.

  Next Story
  ×