என் மலர்

  செய்திகள்

  ஆற்றுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்பாதை.
  X
  ஆற்றுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்பாதை.

  நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை- இந்தியாவில் எங்கே தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை விரைவில் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளார்.
  கொல்கத்தா:

  இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் வகையில் இங்கிலீஷ் கால்வாயில் கடலுக்கு அடியில் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

  இதேபோல ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் தண்ணீருக்கு அடியில் ரெயில் பாதை அமைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுபோன்ற பாதை இதுவரை அமைக்கப்படவில்லை.

  இந்த நிலையில் கொல்கத்தாவில் நீருக்கு அடியில் முதன் முதலாக ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பாதையில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

  இப்போது 2-வது பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதை அங்குள்ள ஹுக்ளி ஆற்றை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  வழக்கமாக ஆறுகள் குறுக்கே வந்தால் மேம்பாலம் மூலம் பாதை அமைப்பார்கள். ஆனால் ஹுக்ளி ஆற்றுக்கு கீழே சுரங்கம் அமைத்து பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 520 மீட்டர் தூரத்திற்கு சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்தது.

  ஆற்றுக்கு கீழே 30 மீட்டர் ஆழத்தில் இது அமைக்கப்பட்டது. ஆற்றில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டு விடாமல் இருக்க 3 அடுக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதை அமைத்தார்கள். இப்போது இந்த பணி முற்றிலும் முடிவு பெற்றுவிட்டது.

  கோப்புப்படம்

  இதன் வழியாக ரெயிலை இயக்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த பாதையில் ரெயில் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளார்.

  இதுசம்பந்தமாக அவர் கூறும்போது, இந்தியாவில் முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பது இந்திய ரெயில்வே வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

  Next Story
  ×