என் மலர்

  செய்திகள்

  விபத்துக்குள்ளான பள்ளி வேன்.
  X
  விபத்துக்குள்ளான பள்ளி வேன்.

  உத்தரகாண்டில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - 8 குழந்தைகள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
  டேராடூன்:

  உத்தரகாண்ட் மாநிலத்தின் தேக்ரி மாவட்டத்தில் உள்ள மந்தாகினி நகரை நோக்கி பள்ளி வாகனம் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக வாகனம் சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்,10 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

  தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த 10 குழந்தைகளை மீட்டனர். அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
  Next Story
  ×