search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரயான்-2
    X
    சந்திரயான்-2

    சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் பாய்கிறது

    தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

    ஸ்ரீரிஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய அனுப்பியது.

    அத்திட்டம் வெற்றி பெற்றதையடுத்து நிலவில் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.

    அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.

    ஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது.

    தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ந்தேதி (நாளை) மதியம் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.

    இதையடுத்து நாளை மதியம் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுகிறது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×