என் மலர்

  செய்திகள்

  ஏர் இந்தியா விமானம்
  X
  ஏர் இந்தியா விமானம்

  ஜம்ஜம் புனித நீரை கொண்டு வர தடையில்லை - ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
  புதுடெல்லி

  இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை  ஏர் இந்தியா விமான நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.  ஹஜ் புனித பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் கிணற்று நீரை எடுத்து வருவதை இஸ்லாமியர்கள் வழக்கமான வைத்துள்ளனர்.

  இந்த நிலையில், மக்காவுக்கு சேவை அளிக்கும் ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்களில் ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அறிவிப்பினை திரும்ப பெறுவதாகவும், புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

  மக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களில் கூடுதலாக 5 கிலோ வரை கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூடுதல் அனுமதி பயணிகளுடன் கொண்டு வரும் கைப்பை சுமைகளுக்கு பொருந்தாது என ஏர் இந்தியா இன்று வெளியிட்ட விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×