search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை குறைத்தது ஆந்திர அரசு
    X

    சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை குறைத்தது ஆந்திர அரசு

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாவலர்கள் குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
    அமராவதி:

    மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது.

    இதேபோல் மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களில் வெற்றிப் பெற்று வாகை சூடியது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் நான்காவது மிகப்பெரிய  பலம் வாய்ந்த கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி  உயர்ந்தது.

    ஆனால், அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை தழுவியது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ‘சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.



    பிரஜா வேதிகா கட்டிடம் கடந்த ஆட்சியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிக்கரையில் இதை கட்டுவதற்கு முறைப்படி சுற்றுச்சூழல் துறையிடமோ, உள்ளாட்சி அமைப்பிடமோ எந்த அனுமதியும் பெற வில்லை. விதிகளுக்கு மாறாக முன்னாள் முதல்-மந்திரி வீடு அருகே இது கட்டப்பட்டுள்ளது.

    இதேபோன்று விதியை மீறி பொதுமக்களில் யாராவது ஒருவர் கட்டிடம் கட்டி இருந்தால் அதை அரசு விட்டுவைக்குமா? எனவே விதியை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடமும் அகற்றப்பட வேண்டும்’ என கூறி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    அடுத்ததாக முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது மகன் மற்றும் முன்னாள் மாநில மந்திரியுமான நர லோகேஷ் ஆகியோருக்கு இனி 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு எனவும்,  இசட் பிரிவு பாதுகாப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.



    Next Story
    ×