search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் ஓட்டலில் விஷவாயு தாக்கி 7 பேர் பலியான விவகாரம்: இருவர் கைது
    X

    குஜராத் ஓட்டலில் விஷவாயு தாக்கி 7 பேர் பலியான விவகாரம்: இருவர் கைது

    குஜராத்தின் வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி 7 பேர் பலியான வழக்கில் ஓட்டல் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுயி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை அன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளிகள் சிலர் ஈடுபட்டனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    உணவகத்தின் உரிமையாளர்களான அப்பாஸ் போரானியா, அவரது சகோதரரும் ஓட்டல் மேனேஜருமான இபாட் போரானியா தலைமறைவாயினர். இதையடுத்து, தலைமறைவான அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில், தேடப்பட்டு வந்த ஓட்டல் உரிமையாளர்கள் இருவரும் அவர்களது வீட்டில் மறைந்திருந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×