search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாஜ்மகாலில் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம்
    X

    தாஜ்மகாலில் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம்

    தாஜ்மகாலுக்குள் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய திட்டத்தை சுற்றுலாத்துறை கொண்டு வந்துள்ளது.
    ஆக்ரா:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ளது.

    உலகம் முழுவதும் இருந்து தினமும் தாஜ்மகாலை பார்வையிட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவர்களும் தாஜ்மகாலை பார்க்க சுற்றுலா சென்று வருகிறார்கள்.

    சமீபகாலமாக தாஜ்மகாலை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், தேவையற்றவர்களின் நடமாட்டத்தை தடுக்கவும் தாஜ்மகாலை பார்ப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமாக ரூ.1,100 வசூலிக்கப்படுகிறது. உள்நாட்டு பயணிகளுக்கு கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. என்றாலும் தாஜ்மகாலுக்குள் செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

    இதையடுத்து தாஜ்மகாலுக்குள் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய திட்டத்தை சுற்றுலாத்துறை கொண்டு வந்துள்ளது. இதற்காக புதிய டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த டோக்கனை பெற்று செல்பவர்கள் 3 மணி நேரத்துக்கு மட்டும்தான் தாஜ்மகாலுக்குள் இருக்க முடியும். இல்லையெனில் தானியங்கி கதவுகள் மூலம் வெளியேற முடியாது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
    Next Story
    ×