என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "additional charges"

    • பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • ஏரி, குளம் தூர்வாரியது.

    புதுச்சேரி:

    புதுவையில் 84 ஏரிகள், 454 குளங்கள் உள்ளன.

    இவை உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விவசாய நிலங்களை வளப்படுத்த வண்டல் மண் தேவை. இதனால் புதுவை அரசு 2020-ல் விவசாயிகளை கொண்டு ஏரி, குளம் தூர்வாரியது.பொதுமக்களே தூர்வாரி அந்த மண்ணை விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தினர்.

    உரிமைத்தொகையாக மாட்டு வண்டிக்கு ரூ.50, டிராக்டருக்கு ரூ.100, லாரிக்கு ரூ.150 செலுத்தி இணையம் வழியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம். இந்த ரசீதை கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் தேவையான வண்டல் மண்ணை எடுத்துசெல்லலாம்.

    இந்த மண் தூர்வாரும் கண்டனம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இதற்காக கனிமங்கள் ஒழுங்குமுறை மேம்பாட்டு விதிகளின் கீழ் திருத்தம் செய்யப்பட்டு, அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி சாதாரண மணல், களிமண், செம்மண் எடுக்க மாட்டு வண்டிக்கு ரூ.125, டிராக்டரில் 3 கியூபிக் மீட்டர் மண் எடுக்க ரூ.325, லாரியில் 8.5 கியூபிக் மீட்டர் மண் எடுக்க ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சுண்ணாம்பு எடுக்க மாட்டு வண்டிக்கு ரூ.200, டிராக்டர், லாரிக்கு ரூ.1000, இதர தாது மணல் எடுக்க ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள். #Pongal2019 #OmniBuses
    போரூர்:

    பொங்கல் பண்டிகை நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைத்தது.

    இதனால் சென்னை மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து தென் மாவட்டத்துக்கு செல்ல 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், தாம்பரம் ரெயில் நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 11-ந்தேதி இரவு முதலே பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதன் காரணமாக பஸ் நிலையங்களில் தினந்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் ரெயில் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்திலும் கடும் கூட்டம் காணப்படுகிறது.

    பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாதாரண ஆம்னி பஸ்சில் ரூ. 1,100 முதல் ரூ. 1,500 வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமாக ரூ. 600 முதல் ரூ. 700 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் படுக்கை வசதி உள்ள பஸ்களில் ரூ. 1,800 முதல் ரூ. 2,200 வரை வசூலித்தனர்.

    சென்னையில்இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் பஸ்களில் ரூ. 2200 முதல் ரூ. 2500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டண உயர்வு கடந்த 9-ந்தேதி முதலே வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை- பெங்களூர், சென்னை-கோவை, சென்னை-திருச்சி, சென்னை - தஞ்சாவூர், சென்னை-மயிலாடுதுறை, சென்னை-கரூர் இடையே இயக்கப்பட்ட பஸ்களிலும் ரூ. 1,500 முதல் ரூ. 1,800 வரை கட்டணமாக பெற்றனர்.


    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதுதவிர விதிமுறையை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ. 30 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் இதுவரை 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை 10 ஆயிரத்து 427 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.

    நாளை பொங்கல் பண்டிகை என்பதால் இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆம்னி பஸ் கட்டணம் குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘சில சிறிய தனியார் பஸ் உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். பெரிய பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கவில்லை. வழக்கமான கட்டணத்தையே வசூலித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pongal2019 #OmniBuses
    கூடுதல் கட்டணம் பெறும் அரசு நிதியுதவி பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை தவிர கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்திட வேண்டும் என அனைத்து நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கூடுதல் தொகை வசூல் செய்யும் பள்ளிகள் பற்றி எழுத்துப் பூர்வமாக மனுவினை திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    ×