என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணல் எடுக்க கூடுதல் கட்டணம் நிர்ணயம்
    X

    கோப்பு படம்.

    மணல் எடுக்க கூடுதல் கட்டணம் நிர்ணயம்

    • பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • ஏரி, குளம் தூர்வாரியது.

    புதுச்சேரி:

    புதுவையில் 84 ஏரிகள், 454 குளங்கள் உள்ளன.

    இவை உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விவசாய நிலங்களை வளப்படுத்த வண்டல் மண் தேவை. இதனால் புதுவை அரசு 2020-ல் விவசாயிகளை கொண்டு ஏரி, குளம் தூர்வாரியது.பொதுமக்களே தூர்வாரி அந்த மண்ணை விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தினர்.

    உரிமைத்தொகையாக மாட்டு வண்டிக்கு ரூ.50, டிராக்டருக்கு ரூ.100, லாரிக்கு ரூ.150 செலுத்தி இணையம் வழியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம். இந்த ரசீதை கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் தேவையான வண்டல் மண்ணை எடுத்துசெல்லலாம்.

    இந்த மண் தூர்வாரும் கண்டனம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இதற்காக கனிமங்கள் ஒழுங்குமுறை மேம்பாட்டு விதிகளின் கீழ் திருத்தம் செய்யப்பட்டு, அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி சாதாரண மணல், களிமண், செம்மண் எடுக்க மாட்டு வண்டிக்கு ரூ.125, டிராக்டரில் 3 கியூபிக் மீட்டர் மண் எடுக்க ரூ.325, லாரியில் 8.5 கியூபிக் மீட்டர் மண் எடுக்க ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சுண்ணாம்பு எடுக்க மாட்டு வண்டிக்கு ரூ.200, டிராக்டர், லாரிக்கு ரூ.1000, இதர தாது மணல் எடுக்க ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×