search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகளின் ஆலோசனை கூட்டம்
    X

    டெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகளின் ஆலோசனை கூட்டம்

    தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் மத்திய மந்திரிகள் அனைவரும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மத்திய மந்திரிகள் அனைவரும்  டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியை நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மத்திய மந்திரிகள் அனைவரும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த பிரதமரை பாஜக தலைவர் அமித் ஷா மலர் செண்டு அளித்து வரவேற்று கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் சென்றார்.



    பிரதமர் மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மந்திரிகள் அனைவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×