search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது- மூவர் குழு ஆய்வில் உறுதி
    X

    முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது- மூவர் குழு ஆய்வில் உறுதி

    முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், அணையின் 13 மதகுகளும் சீராக உள்ளதாகவும் மூவர் குழுவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. #MullaperiyarDam
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேபி அணையையும் பலப்படுத்தி நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது. அணையினை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர் வள ஆணையர் தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.
     
    இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியும், கேரளா சார்பில் ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்பட்டனர். இக்குழுவுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழு நியமிக்கப்பட்டு அவர்கள் அவ்வப்போது அணையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை மூவர் குழுவிற்கு சமர்பித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அணையின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்யப்படுகிறது.

    அவ்வகையில், சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணை மீண்டும் கண்காணிப்பு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், அணையில் தற்போதைய நீர்மட்டமான 112.80 அடிக்கு ஏற்றாற்போல் அணை பலமாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அணையின் 13 மதகுகளின் இயக்கம் சீராக இருப்பதாக மூவர் குழு ஆயவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அணைக்கு செல்லும் வல்லக்கடவு சப்பாத்து பாலத்தை நிரந்தரமாக சீரமைக்கும்படி, ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து, அடுத்த மாதம் 2வது வாரத்தில் மீண்டும் அணையில் மூவர் குழு ஆய்வு செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. #MullaperiyarDam
    Next Story
    ×