search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலகிருஷ்ண ரெட்டியின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
    X

    பாலகிருஷ்ண ரெட்டியின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

    தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. #BalakrishnaReddy #SupremeCourt
    புதுடெல்லி:

    பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும் மேல்முறையீடு செய்ய வசதியாக  தண்டனையை நிறுத்தி வைத்து உடனடியாக ஜாமீன் வழங்கியது.

    இந்த தீர்ப்பினால், பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது.



    இதையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு முடியும் வரை பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    எனவே, பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடியும் வரை, சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. தொடர்ந்து அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். #BalakrishnaReddy #SupremeCourt
    Next Story
    ×