search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு- 3 பேர் கைது
    X

    திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு- 3 பேர் கைது

    திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி அருகே உள்ள ரங்கம்பேட்டை, சேசாசலம் வன பகுதியில் பீமவரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அப்போது வனபகுதியில் 60க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சரணடையுமாறு எச்சரிக்கை செய்தனர். ஆனால் அந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் வாகனத்தை நோக்கி ஒரு ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தனர்.

    இதையடுத்து செம்மர கடத்தல் கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர்.

    மற்ற நபர்கள் தப்பி விட்டனர். தப்பி சென்றவர்கள் விட்டுச் சென்ற செம்மரங்களையும், அருகே இருந்த லாரியில் சமையல் செய்வதற்கான காய்கறிகள், அரிசி, பருப்பு, 1 பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் தப்பி சென்றவர்களை பிடிக்க தலக்கோணம், பீலேரு மற்றும் ஆயுதப்படை போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தப்பி சென்றவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய இடத்தை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் பார்வையிட்டு பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் ஆற்காட்டை சேர்ந்த பாஸ்கர் (வயது 32). சென்னை கே.கே.நகர் சத்தீஸ்ராஜ் (30), மற்றொருவர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரூபேஸ் (27) என்பது தெரியவந்தது. #tamilnews
    Next Story
    ×