search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் 120 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு - கருத்து கணிப்பில் தகவல்
    X

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் 120 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு - கருத்து கணிப்பில் தகவல்

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் 120 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டள்ளது. #RajasthanElections #Congress

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது வசுந்தரராஜே சிந்தியா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க. 163 தொகுதிகளில் வெற்றி பெற்று இமாலய பலத்துடன் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 21 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் மாதம் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் இந்த தடவையும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராஜஸ்தானில் முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அங்கு பா.ஜ.க.வுக்கு எதிராக கடும் அதிருப்தி அலை வீசுகிறது. இதனால் இந்த தடவை காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்தது.


    பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் “டைம்ஸ் நவ்”- சி.என்.எஸ். ஆகியவை இணைந்து புதிய கருத்துக் கணிப்பை நடத்தின. அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    அதில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 110 முதல் 120 இடங்கள் வரை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு 70 முதல் 80 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 3 இடங்களும் மற்ற கட்சிகள், சுயேட்சைகளுக்கு 9 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டள்ளது.

    முதல்-மந்திரி பதவிக்கு வர தகுதியானவர் யார்? என்ற கேள்விக்கு 32 சதவீதம் பேர் காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு ஆதரவளித்துள்ளனர். பா.ஜ.க. தலைவர் வசுந்தராவுக்கு 31 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் ஹெலாட்டை 16 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். வசுந்தராவின் கடந்த 5 அண்டகால ஆட்சி எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு 48 சதவீதம் பேர் மோசம் என்றும் 35 சதவீதம் பேர் நன்றாக இருந்தது என்றும் கூறியுள்ளனர். #RajasthanElections #Congress

    Next Story
    ×