search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்கிம் பயணத்தின் போது புகைப்பட கலைஞராக மாறிய பிரதமர் மோடி
    X

    சிக்கிம் பயணத்தின் போது புகைப்பட கலைஞராக மாறிய பிரதமர் மோடி

    சிக்கிம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு இயற்கை எழில்கொஞ்சும் மலைகளை புகைப்படமாக எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #PMModi
    காங்டாக் :

    பிரதமர் மோடி புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் உடையவர். உலகத் தலைவர்களுடனான சந்திப்பின் போது எடுக்கப்படும் போட்டோக்கள் நன்றாக வர வேண்டும் என அக்கறை எடுத்துக்கொள்வார். இதனால், பொதுக்கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்கும் போது கேமராக்கள் எங்கு உள்ளது என பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும் என அவரை பற்றி பலர் சமூக வளைதளங்களில் கருத்துக்களை பகிர்வதும் உண்டு.

    இந்நிலையில், தான் எடுத்த போட்டோக்களை ட்விட்டரில் பதிவிட்டு புகைப்படக் கலைஞராக மாறியுள்ளார் பிரதமர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சுமார் 605 கோடி ரூபாய் செலவில் பாக்யாங் நகரில் கட்டப்பட்டுள்ள அம்மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை அவர் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

    இதற்காக சிக்கிம் மாநிலம் சென்றுள்ள பிரதமர், செல்லும் வழியில் இயற்கை எழில்கொஞ்சும் மலைகளை அவரே கேமராவில் போட்டோ எடுத்துள்ளார். அவ்வாறு அவர் எடுத்த 4 போட்டோக்களை ‘ சாந்தம் மற்றும் அற்புதம்’ எனக் குறிப்பிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #PMModi
    Next Story
    ×