search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை - யஷ்வந்த்சின்கா குற்றச்சாட்டு
    X

    மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை - யஷ்வந்த்சின்கா குற்றச்சாட்டு

    மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா கூறியுள்ளார். #PMModi #YashwantSinha #BJP

    பெங்களூர்:

    பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த்சின்கா பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினால் அவர்களை நசுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பா.ஜனதா கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முயற்சிக்கிறார்கள். தேசிய அளவில் உள்ள ஜனநாயக அமைப்புகள் மீது ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. மொத்தத்தில் நாட்டில் அறிவிக்கப்படாத மறைமுக நெருக்கடி நிலை நிலவுகிறது.

    ஐதராபாததில் கவிஞர் வரவரராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது போராட்டக்காரர்களை அடக்கும் முயற்சியாகும். இது போன்ற அடக்குமுறை ஆட்சியை நாடு எப்போதும் கண்டதில்லை. வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை தங்கள் விருப்பம்போல் மத்திய அரசு இயக்கி வருகிறது.

    ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது திடீரென்று எச்.ஏ.எல். நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? இதனால் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அமைச்சவை கவனத்துக்கு வராமல் இந்த பேரம் நடந்துள்ளது. இதற்கு மோடியே பொறுப்பாளி.


    ரபேல் போர் விமானம் வாங்கியதற்கான மொத்த செலவு எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளேன். ‘மேக் இன் இந்தியா’ என்று கூறுபவரே வெளிநாட்டுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்தது சரியா? அந்த நிறுவனத்துக்கு எதிராக நான் பேச மாட்டேன். ஏனென்றால் ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு பதிவு செய்யக்கூடும்.

    புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்பவர் ஒரே நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தது ஏன்? அனுபவம் இல்லாத நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்தீர்கள். இவ்வி‌ஷயத்தில் எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு இது ரகசியம் என்கிறது. இதன் பின்னணியில் என்னென்ன நடக்கிறது என்பது உலகத்துக்கே தெரியும். அதன்பின் எப்படி இது ரகசியமாக இருக்க முடியும்.

    இது ரகசியமாக வைத்திருக்கக் கூடிய வி‌ஷயமல்ல. நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும். மத்திய அரசு உடனடியாக இதற்கு பதில் அளிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டில் பிரதமருக்கு தொடர்புள்ளது. இவ்வி‌ஷயத்தில் பிரதமரே முடிவெடுத்ததாக முன்னாள் மத்திய மந்திரி மனோகர் பார்க்கர் கூறி இருந்தார்.

    பாராளுமன்ற இணை கமிட்டி கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும். அங்கு முடிவெடுத்து மக்களவை, மாநிலங்களவையில் ஒப்புதல் பெற வேண்டும். ஆளும் கட்சியினரே கமிட்டி தலைவராக இருப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×