search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலை, ரூ.10 லட்சம் நிதியுதவி
    X

    நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலை, ரூ.10 லட்சம் நிதியுதவி

    கேரளாவில் நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலை மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. #Lini #KeralaGovt #Nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வேகமாக பரவி வரும் 'நிபா' வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு விரைந்தது. நிபா வைரஸ் அறிகுறியுடன் 10-க்கும் மேற்பட்டோர் கோழிக்கோடு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி என்ற நர்சும் நேற்று முன் தினம் காலையில் மரணமடைந்தார். அவருடைய சடலத்தை உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. அவருக்கு இறுதிச்சடங்கு யாரும் செய்யவில்லை.

    இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை விட்டுப் பிரிந்த லினி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கனிவான முறையில் சிகிச்சையளித்து வந்து உள்ளார். வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவும், பகலுமாக கண்விழித்து சிகிச்சையை அளித்து வந்து உள்ளார். அவருடைய உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலி லினி கடைசிநேர உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. செவிலி லினியின் கணவர் ப்க்ரைனில் பணிபுரிந்து வருகிறார். கடைசி நேரத்தில் தன்னுடைய கணவரை சந்திக்க முடியாது என்ற நிலையில் இந்த கடிதத்தை லினி எழுதி உள்ளார்.

    அதில், 'சாஜி சேட்டா, நான் எனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் உங்களைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கைகூட எனக்கு கிடையாது. என்னை மன்னிக்கவும். நமது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்து கொள்ளுங்கள்.  விவரமறியா அந்த குழந்தைகளை உங்களுடன் வளைகுடா நாட்டுக்கே கூட்டி சென்றுவிடவும். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்கக்கூடாது' என லினி தன்னுடைய கடிதத்தை எழுதி உள்ளார்.

    லினியின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் தன்னுடைய தாயுக்கு என்ன நேரிட்டது என தெரியாமலே விளையாடுவது அனைவரது நெஞ்சையும் உடைய செய்கிறது. லினியின் சேவை மனப்பான்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு பணி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும், நிபா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. #Lini #KeralaGovt #Nipahvirus
    Next Story
    ×