search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வி, மருத்துவ உதவிகள் செய்பவர்களை புகழ்ந்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
    X

    கல்வி, மருத்துவ உதவிகள் செய்பவர்களை புகழ்ந்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

    நாட்டில் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருபவர்கள் பிரதமர் நரேந்திர மோடி ரேடியோவில் உரையாற்றும் நிகழ்ச்சியான மனதின் குரலில் (மன் கி பாத்) பேசியுள்ளார். #MannKiBaat #PMModi

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை ரேடியோவில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த ஆண்டின் மூன்றாவது உரையை இன்று நிகழ்த்தினார். அதில் நாட்டில் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருபவர்கள் குறித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-

    13 ஆண்டுகளுக்கு முன்னர், கொல்கத்தாவை சேர்ந்த வாடகை கார் ஓட்டுனர் சைதுல் லஸ்கர் தனது தங்கைக்கு மருத்துவ உதவி அளிக்க முடியாததால் அவரை இழந்தார். அப்போது மேற்கொண்டு ஏழைகள் யாரும் மருத்துவ வசதி கிடைக்காமல் மரணமடைய கூடாது என்பதற்காக மருத்துவமனை கட்ட அவர் முடிவெடுத்தார்.

    இந்த திட்டத்திற்காக அவர் தன் வீட்டில் இருந்த நகைகளை விற்றதோடு, மற்றவர்களிடம் உதவி பெற்றார். அவரது வாடிக்கையாளர்களும் நல்ல உள்ளத்தோடு அவருக்கு உதவினர். 12 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா அருகில் உள்ள புன்ரி கிராமத்தில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர் கட்டி முடித்தார். இதுதான் புதிய இந்தியாவின் சக்தி.  

    கான்பூரை சேர்ந்த டாக்டர் அஜித் மோகன் சவுத்தரி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடையாக பயணம் செய்யும் செய்தியை கேட்டபோது நம் நாட்டின் சகோதரத்துவத்தை உணர எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

    அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுனர் அகமது அலி ஏழை குழைந்தைகளுக்காக ஒன்பது பள்ளிக்கூடங்கள் கட்டிய செய்தி குறித்து நீங்கள் எழுதிய கடிதத்தை படிக்கும் போது நமது நாட்டின் மன உறுதி பார்க்க முடிகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #MannKiBaat #PMModi #tamilnews
    Next Story
    ×