search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் இல்லை: ராகுல்காந்தி முடிவு
    X

    மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் இல்லை: ராகுல்காந்தி முடிவு

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்திய நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி கடந்த மாதம் பதவி ஏற்ற பின்பு கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்வார், மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இபோதைக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.

    டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று ராகுல்காந்தி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தலைவர்கள் மாற்றம் சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் பழைய தலைவர்களே நீடிக்கட்டும் என்று ராகுல்காந்தி ஒப்புதல் அளித்தார்.

    தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் இருந்து வருகிறார். அவரே தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிப்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதுபோல் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்படவில்லை. தொடர்ந்து நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அங்கே சட்டசபை தேர்தல் வர இருப்பதால் தேர்தல் வியூகம் குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    முன்னதாக வருகிற 13-ந் தேதி டெல்லியில் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். இதற்காக நிர்வாகிகள் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தியின் சுற்றுப்பயண விவரம், தேர்தல் பிரசார யுக்தி போன்றவை குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    குஜராத் சட்டசபை தேர்தலில் ராகுல்காந்தியின் பிரசாரம் பா.ஜனதாவுக்கு நெருக்கடி அளிப்பதாக இருந்தது. காங்கிரசுக்கு ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்தது.

    எனவே கர்நாடகத்திலும் அதுபோல் பிரசாரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது.
    Next Story
    ×