search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷாவின் கைக்கூலியாக செயல்படும் நிதிஷ்குமார் - காங்கிரஸ் எம்.பி. கடும் தாக்கு
    X

    அமித்ஷாவின் கைக்கூலியாக செயல்படும் நிதிஷ்குமார் - காங்கிரஸ் எம்.பி. கடும் தாக்கு

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் கைக்கூலியாக பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் செயல்படுகிறார் என கிழக்கு டெல்லி காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீட்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    பீகாரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே, துணை முதல்-மந்திரி தேஜஸ்வி மீது
    சி.பி.ஐ. ஊழல் வழக்குப்பதிவு செய்தது. ஆனால் தேஜஸ்வி பதவி விலக மறுத்ததால், நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். அவரது இந்த முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.

    இந்நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் கைக்கூலியாக செயல்பட்டு வருவதாக கிழக்கு டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீட்சித் குற்றம்சாட்டியுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ’நிதிஷ்குமாரின் முடிவுக்கு அவரது கட்சியில் உள்ள பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்மீது வைத்த நம்பிக்கையை அவரே சிதைத்து விட்டார். அவர் மிகவும் பலவீனமான
    முதல்-மந்திரியாக மாறி வருகிறார்.

    இதற்கு முன்னர் அவர் மதிப்புக்குரிய தலைவராக விளங்கி வந்தார். ஆனால், இப்போது அவர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×