search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீத்தாராம் யெச்சூரி 3-வது முறை எம்.பி ஆவதற்கு ’நோ’ சொன்ன கட்சி
    X

    சீத்தாராம் யெச்சூரி 3-வது முறை எம்.பி ஆவதற்கு ’நோ’ சொன்ன கட்சி

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தொடர்ந்து 3-வது முறை மாநிலங்களவை எம்.பி ஆக தேர்ந்தெடுக்க அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து இரண்டு முறை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்குவங்காளத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யெச்சூரியின் பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், யெச்சூரி மூன்றாவது முறையாக மாநிலங்களவை எம்.பி. ஆக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கட்சி விதிகளின்படி மாநிலங்களவைக்கு இரண்டு முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்.

    முன்னதாக, யெச்சூரி மூன்றாவது முறையாக எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் மேற்குவங்க பிரிவினர் முன் மொழிந்தனர். காங்கிரஸ் கட்சி ஆதரவோடு அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். காங்கிரஸ் கட்சி உதவியுடன் எம்.பி. ஆவதற்கு கேரள மாநில பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது.

    மேற்குவங்காள மாநிலத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜூலை 28 கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×