என் மலர்

  செய்திகள்

  டெல்லி அருகே காரில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த கும்பல்: ரோட்டில் வீசிய கொடூரம்
  X

  டெல்லி அருகே காரில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த கும்பல்: ரோட்டில் வீசிய கொடூரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி அருகே ஓடும் காரில் இளம்பெண் கடத்தி கற்பழித்த கும்பல், அந்தப் பெண்ணை ரோட்டில் வீசிய கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  புதுடெல்லி:

  டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  அதன்பிறகும் தொடர்ந்து டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள குர்கான், நொய்டா ஆகிய நகரங்களிலும் கற்பழிப்பு குற்றங்கள் தொடர்ந்து நடக்கிறது. நொய்டாவில் நேற்று இரவும் ஒரு பெண் ஓடும் காரில் கற்பழிக்கப்பட்டார்.

  டெல்லியை அடுத்த குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சோகனா சாலையில் நடந்து சென்ற போது வேகமாக வந்த கார் பெண் அருகே திடீர் என்று நின்றது. காரில் இருந்தவர்கள் அந்தப்பெண்ணை காருக்குள் இழுத்துப்போட்டு கடத்திச் சென்றனர்.

  ஓடும் காரிலேயே அந்தப் பெண்ணை கும்பல் கற்பழித்தது. பின்னர் நொய்டாவில் ஒரு ஆஸ்பத்திரி அருகே வந்த போது அந்தப் பெண்ணை காரில் இருந்து கீழே தள்ளி ரோட்டில் வீசிச்சென்று விட்டனர்.

  பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. மற்றவர்கள் உதவியுடன் குருகிராமில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டாள். இந்த விவரம் தெரியவந்ததும் நொய்டா போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறுவதற்காக குருகிராம் விரைந்துள்ளனர்.
  Next Story
  ×