என் மலர்

  செய்திகள்

  என் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் நான் சிறையில் இருந்திருப்பேன்: கெஜ்ரிவால்
  X

  என் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் நான் சிறையில் இருந்திருப்பேன்: கெஜ்ரிவால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் நான் சிறையில் இருந்திருப்பேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ராவுக்கு பதில் அளித்துள்ளார்.
  புதுடெல்லி:

  ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கபில் மிஸ்ரா முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றார். குறிப்பாக கெஜ்ரிவால் அமைச்சர் ஒருவரிடம் ஒருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் அதற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளதாகவும் கூறி வருகிறார். 

  இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்களை கெஜ்ரிவால் ஆதரவு தலைவர்கள் மறுத்து வருகின்றனர். மேலும் வெற்றுப் புகார்கள் என்று கூறியதோடு அவரது ஆதரவாளர்கல் கபில் மிஸ்ரா மீது தாக்குதலிலும் ஈடுபட்டனர். 

  இந்நிலையில், கெஜ்ரிவாலிடம் இருந்து ஆம் ஆத்மியை மீட்டெடுங்கள் என்று யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷனுக்கு மிஸ்ரா அழைப்பு விடுத்து இருந்தார். 

  இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் நான் சிறையில் இருந்திருப்பேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ராவுக்கு பதில் அளித்துள்ளார்.  இது குறித்து கெஜ்ரிவால் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ”எங்கள் தரப்பினர் மீது கடந்த சில நாட்களாக பெரிய அளவில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஏனெனில், எதிர் தரப்பினர் எங்களை மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கின்றனர். உங்கள் சொந்த மக்களே உங்களுக்கு துரோகம் செய்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது” என்றார்.
  Next Story
  ×