என் மலர்tooltip icon

    இந்தியா

    • அமெரிக்கா விதித்த 50சதவீத வரிச் சுமையை சமாளிக்க இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டதாக என்ற கேள்விக்கு நிர்மா சீதாராமன் பதிலளித்தார்.
    • நவராத்திரி முதல் நாள் அமலான இந்தச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017இல் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை ஜிஎஸ்டி கொண்டிருந்தது. 8 ஆண்டுகளாக இவ்வரி மாற்றம் இன்று வசூலுக்கப்பட்டு வந்த நிலையில் இந்நிலையில் அண்மையில் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்பட்டது.

    கடந்த மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. மேலும் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இன்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

    அதில் பேசிய நிர்மலா சீதாராமன், "நவராத்திரி முதல் நாள் அமலான இந்தச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையின் பலன்கள் முழுமையாக மக்களை சென்றடைந்துள்ளன.

    செப்டம்பரின் கடைசி ஒன்பது நாட்களில் மட்டும் பயணிகள் வாகன விற்பனை 3.72 லட்சம் அலகுகளாகவும், இருசக்கர வாகன விற்பனை 21.60 லட்சம் அலகுகளாகவும் உயர்ந்துள்ளது. டிவி விற்பனை 30-35% ஆகவும், ஏ.சி. விற்பனை இருமடங்காகவும் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிச் சுமையை சமாளிக்க இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டதாக என்ற கேள்விக்கு நிர்மா சீதாராமன் பதிலளித்தார்.

    அதாவது, இந்த சீர்த்திருத்தம் குறித்து கடந்த ஒன்றை வருடங்களாக திட்டமிடப்பட்டது என்றும் எனவே வர்த்தக போருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

    செய்தியாளர்களிடம் அஸ்விணி வைஷ்ணவ் பேசுகையில், "ஜி.எஸ்.டி. குறைப்பால் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

     பியூஷ் கோயல் பேசுகையில், "ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் உள்நாட்டு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

    8 நாட்களில் 1.65 லட்சம் மாருதி கார்கள் விற்பனை ஆகியுள்ளது. மகேந்திரா கார் விற்பனை 50% அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாடா கார்கள் விற்பனையாகியுள்ளன" என்று தெரிவித்தார். 

    • நம்பகத்தன்மையான முகமான நிதிஷ் குமாரின் கீழ் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்.
    • யார் தங்களைத் தலைமை தாங்கப் போகிறார்கள் என எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது.

    பீகாரில் அடுத்த மாதம் 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மூன்று நாள் பயணமாக பீகார் சென்றிருந்தார்.

    இன்றுடன் அவருடைய 3 நாள் பயணம் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய முகமூடி அணிந்த காட்டு ராஜ்ஜியத்தை நம்பாதீர்கள் என பீகார் மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொட்ரபாக அமித் ஷா கூறியதாவது:-

    கடந்த 20 வருடங்களாக நாங்கள் பள்ளத்தை நிரப்பியது போன்று பீகார் மக்களின் ஆசிகளை பெற நான் இங்கு வந்துள்ளேன், பள்ளத்தை நிரப்பிய நிலையில், தற்போதுள்ள உறுதியான தரையில் ஒரு பிரமாண்டமான கட்டமைப்பைக் கட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

    புதிய முகமூடி அணிந்து காட்டு ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வருபவர்களை நம்ப வேண்டாம் கேட்டுக்கொள்கிறேன். நம்பகத்தன்மையான முகமான நிதிஷ் குமாரின் கீழ் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு தர வேண்டும். மத்தியில் இருந்து பிரதமர் மோடியும், பீகார் மாநிலத்தில் இருநது நிதிஷ் குமாரும் பல வருடங்களாக உருவாக்கியதை, மேலும் வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல இது உதவும்.

    பிரசாந்த் கிஷோர் புதிய கட்சியைத் தொடங்கி, முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவரைப் பற்றிப் பேசுவோம்.

    தேர்தலுக்கு முன்னதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏராளமான இலவசங்களை அறிவித்ததாகவும், ஆட்சிக் காலம் முழுவதும் மக்களின் துயரங்களைப் பொருட்படுத்தாமல் இருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது.

    எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி கவலைப்படுவதால் அப்படிச் சொல்கின்றன. யார் தங்களைத் தலைமை தாங்கப் போகிறார்கள், எந்தக் கட்சி யாரை எந்தத் தொகுதியில் நிறுத்த விரும்புகிறது என்பது அவர்களுக்கே தெரியாது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்
    • இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.

    இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார்.

    அவ்வ்கையில் கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில், கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அந்த அமைப்பின் சீருடை அணிந்து கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    • அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க பாடுபட்டனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.

    இதனையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டு அணைத்து பயணிகளும் உடனடியாக வெளியற்றப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தினால் ஒரு பெண் பயணிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

    • யூசுப் பதான் மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பழமையான ஆதீனா மசூதிக்கு சென்றார்.
    • கி.பி 1373-1375 காலகட்டத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது.

    முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான யூசுப் பதான் மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பழமையான ஆதீனா மசூதிக்கு சென்றார்.

    இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அந்த பதிவில், "மேற்கு வங்காளத்தின் மால்டாவில் உள்ள ஆதீனா மசூதி, 14 ஆம் நூற்றாண்டில் இலியாஸ் ஷாஹி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரான சுல்தான் சிக்கந்தர் ஷாவால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க மசூதியாகும். கி.பி 1373-1375 இல் கட்டப்பட்ட இந்த மசூதி அந்த காலத்தில் இந்திய துணைக் கண்டத்தின் மிகப்பெரிய மசூதியாக இருந்தது. இது இப்பகுதியின் கட்டிடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

    யூசுப் பதானின் இந்த பதிவை பகிர்ந்த மேற்குவங்க பாஜக, "இது ஆதீனா மசூதி அல்ல ஆதிநாத் கோவில்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு, ஆதீனா மசூதிக்குள் நுழைந்த பூசாரிகள் இந்து சடங்குகளை நடத்தினர். பிருந்தாவனத்தில் உள்ள விஸ்வவித்யா அறக்கட்டளையின் தலைவரான ஹிரன்மோய் கோஸ்வாமி, இந்து கோவிலின் மீது மசூதி கட்டப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து கோஸ்வாமி மீது இந்திய தொல்லியல் துறை வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • இனிப்புக் கடையில் விலை உயர்ந்த இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளிக்கு புதிய ஆடை அணிவதும், இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

    தீபாவளி தினத்தன்று பயன்படுத்தவும், உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கவும் இனிப்பு வகைகளை வாங்குவதும் அதிகரித்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் இனிப்பு வகைகள் செய்வது எப்படி என்பது அறிந்து இல்லங்களிலும் பெண்கள் இனிப்புகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் தங்க சாம்பல் அல்லது 'ஸ்வர்ண பாஸ்மா' என்று அழைக்கப்படும் 24 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் நிரப்பப்பட்ட 'ஸ்வர்ண பிரசாதம்' என்ற இனிப்பு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'ஸ்வர்ண பிரசாதம்' இனிப்பு ஒரு கிலோ ரூ.1,11,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அந்த இனிப்புக் கடையில் விலை உயர்ந்த இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • இடுக்கியில் நேற்றிரவு பெய்த கனமழையால் முல்லை பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • டெம்போ வாகனம் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    அவ்வ்கையில் கேரளாவின் இடுக்கியில் நேற்றிரவு பெய்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக அதிகரித்தது. இதனையடுத்து முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அப்போது கூட்டார் நகரத்தின் அருகே ஆற்றின் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக டெம்போ வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ஆற்றில் டெம்போ வாகனம் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
    • காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பந்த் தொடங்கியது. இந்த பந்த் நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்த் நடவடிக்கையால் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

    உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலுங்கானா அரசின் அரசாணைக்கு அக்டோபர் 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளனர்.
    • மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.

    நேற்று அதிகாலை 3 மணிக்கு அலிப்பிரி விநாயகர் கோவில் அருகே உள்ள கனுமா சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. நடைபாதையில் சென்ற பக்தர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

    சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாடுவதை கண்டறிந்தனர். தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளனர். மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே செல்ல வேண்டாம். குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். கூட்டம் கூட்டமாக நடைபாதையில் செல்ல வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 66,675 பேர் தரிசனம் செய்தனர். 24,681 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • ஐயப்பன் கோவிலுக்கு 14 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 13 பேரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர்.
    • கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொ தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறந்திருக்கும். அதன்படி தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். நேற்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

    இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு காலை 8 மணிக்கு நடைபெற்றது.

    ஐயப்பன் கோவிலுக்கு 14 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 13 பேரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் தனித்தனி குடங்களில் போடப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

    ஐயப்பன் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதி காஷ்யப் வர்மா எடுத்தார். அதில் சபரிமலை மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் ஆரேஸ்வரம் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயத்தின் மேல்சாந்தியாக உள்ளார்.

    இதேபோல் மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதியான மைதிலி என்ற சிறுமி எடுத்தார். அதில் கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    புதிய மேல்சாந்திகள் இருவரும் நடப்புஆண்டு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை மேற்கொள்வார்கள். மண்டல பூஜை தொடங்குவதற்கு முன்னதாக அவர்கள் மேல்சாந்தியாக பொறுப்பேற்பார்கள்.

    • குஜராத் மாநிலத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • இதில் ஜடேஜாவின் மனைவி உள்பட 19 புதுமுகங்கள் மந்திரியாக பதவியேற்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும், 2027-ம் ஆண்டு சட்டசபை தேர்தலும் நடக்கின்றன.

    அதற்குமுன் மந்திரி சபையை மாற்றி அமைக்க முதல் மந்திரி முடிவு செய்தார். அவரது அறிவுறுத்தலின்படி, அவரைத் தவிர மீதி உள்ள 16 மந்திரிகளும் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை முதல் மந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்நிலையில், நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத்தை முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்தித்தார். புதிய மந்திரிகள் பதவியேற்புக்கு அனுமதி கோரினார். கவர்னரும் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தில் மந்திரி சபை விரிவாக்க நிகழ்ச்சி நடந்தது.

    19 புதுமுகங்களுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    அவர்களில், ஆச்சரியப்படத்தக்க புதுமுகமாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா புதிய மந்திரியாக பதவியேற்றார். ஜடேஜாவும், அவருடைய மகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் நுழைந்துள்ளது.
    • டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் யுபிஐ ஆதிக்கம் செலுத்துகிறது என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போதுஅவர் பேசியதாவது:

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்தியாவை யாரும் தடுக்கமுடியாது. பல சவால்களில் இருந்து இந்தியா மீண்டுள்ளது.

    140 கோடி இந்தியர்களும் முன்னேறிச் செல்கின்றனர். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் நுழைந்துள்ளது.

    டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் யுபிஐ ஆதிக்கம் செலுத்துகிறது.

    இன்று உலகின் 50 சதவீத டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கிறது.

    2014-ம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேருக்கு வங்கிக்கணக்கு இல்லை.

    நாங்கள் வங்கி அமைப்பை சீரமைத்ததுடன் 50 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளோம் என தெரிவித்தார்.

    ×