என் மலர்
தேர்தல் செய்திகள்
மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #LoksabhaElections2019
மதுரை:
பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜ்சத்யன் போட்டியிடுகிறார். இவர் மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் நேற்று தபால் வாக்குப்பதிவு செய்த போலீஸ்காரர்களிடம் ஓட்டு கேட்டார்.
இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தங்கமீனா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LoksabhaElections2019

தேர்தல் விதிகளை மீறியதாக டி.டி.வி. தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #LokSabhaElections2019 #TTVDhinakaran
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் வ.து.ந. ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 9-ந் தேதி திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக வாகனங்களில் பேரணியாக வந்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்குமாரி முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி டி.டி.வி. தினகரன், வேட்பாளர் வ.து.ந. ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

முக ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமரவைக்கும் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள் என தேர்தல் பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். #UdhayanidhiStalin
திருச்சி:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள். குடும்பம், குடும்பமாக, அலை அலையாக வந்து ஆதரவு தெரிவித்து விட்டு செல்கிறார்கள். தி.மு.க.வினர் ஆதரவு தருவது மட்டும் இன்றி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
பல இடங்களில் அவர்களது பிரசார வாகனங்கள் நம்மை கடந்து சென்றபோது வாகனங்களை நிறுத்திவிட்டு வந்து, நீங்க ஜெயிச்சிட்டீங்க போங்க என கூறி கைக்குலுக்கி விட்டு செல்கிறார்கள்.
நான் அவர்களிடம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர்கள் மோடியின் பருப்பு தமிழ் நாட்டில் வேகாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் எங்களுக்கு வேறு வழி இல்லை. 2 அடிமைகளிடம் சிக்கி நாங்கள் தவிக்கிறோம். அந்த அம்மா இருந்தவரை கொஞ்சமாவது மரியாதை இருந்தது. அவங்க மறைந்த பின்னர் கொஞ்சம் இருந்த மரியாதையும் போய்விட்டது. அதனால் தான் இப்படி பேசுகிறோம் என்றார்கள்.
ஏப்ரல் 18... மோடியை வீட்டுக்கு அனுப்பபோவது இல்லை. ராகுல் காந்தியை பிரதமராக உட்கார வைக்கப்போகிறது. அதோடு தமிழகத்தில் மோடியின் அடிமைகள் 2 பேரையும் வீட்டுக்கு அனுப்ப போகிறோம்.
எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவர். இதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு கருணாநிதி மரணத்தின் போது அவர் நடந்து கொண்ட விதம் தான். நமது தலைவர் அவரது கையை பிடித்து கெஞ்சியும் கருணாநிதி உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்வதற்கு 6 அடி இடம் தர மறுத்து விட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விடிய, விடிய விவாதம் நடந்தது. நீதி வென்றது. மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் கருணாநிதி உடலை அடக்கம் செய்யலாம் என தீர்ப்பு வந்தது. இறந்த பின்னரும் போராட்டம் நடத்தி வென்றவர் கருணாநிதி.
கொஞ்சம் கூட இரக்கம் இன்றி கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு இடம் கொடுக்க மறுத்த ஆட்சியை தூக்கிப் போட்டு மிதிக்கும் நேரம் வந்து விட்டது. ஏப்ரல் 18 அன்று நீங்கள் அளிக்கும் வாக்கு தி.மு.க. கூட்டணியை 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்யவேண்டும்.
அதேபோல் 18 தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலிலும் நமது வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும். மே 19-ந்தேதி நடைபெற உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற செய்யவேண்டும். மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை.
ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாள். அன்று நமது தலைவரை (ஸ்டாலின்) தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமரவைக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்து இருக்கிறது. அதனை தவற விட்டு விடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #UdhayanidhiStalin

தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டு புகார் மனுவினை ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளதாக காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
திருச்சி:
திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் முகைதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. அனைத்து விதத்திலும் தோல்வியுற்ற கட்சி. அதற்கு அவர்களின் தேர்தல் அறிக்கை உதாரணமாக உள்ளது. 2014ல் கூறிய அத்தனையும் இடம் பெற்றுள்ளது. அதில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்பது கண்டிக்கத்தக்கது. ராமர் கோவில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் ராமர் கோவில் கட்டுவோம் என்றுள்ளனர். இது நீதிமன்றத்தை உதாசினப்படுத்துவது. கோவில் கட்டுவது அரசு வேலை அல்ல.
தற்போது ரபேல் விமான பிரச்சனையை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுவே அவர்களின் பொய்களுக்கு சான்றாகும். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் ராகுல் தலைமையிலும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலும் நல்லாட்சி அமையும். பழைய நல்லிணக்க இந்தியாவாக தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
பா.ஜ.க. வைரஸ் கிருமி போல் பரவியுள்ளது. அந்த வைரஸ் கிருமியை அழிக்கும் ஆண்டிடோட்டல் நாங்கள். இந்தியாவிற்கு எதிரான கட்சி பி.ஜே.பி., தற்போது அனைத்து துறையினரும் அதனை எதிர்க்கிறார்கள்.
இந்தியாவின் தேர்தல் ஆணையம் உலக அளவில் தலை சிறந்தது. ஆனால் வருமான வரித்துறையை ஏவி எதிர்கட்சியினர் வீடுகளில் சோதனை செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டு புகார் மனுவினை ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளோம். தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலை உள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019

கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
நாகர்கோவில்:
கன்னியாகுமரி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று நான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை. தேர்தல் நெருங்கும் போது தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அந்த கட்சிகளின் தலைவர்கள் பரபரப்பு கிளப்புவது வாடிக்கை. அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனும் அப்படி பரபரப்பு கிளப்பி உள்ளார்.

குமரி மாவட்ட அரசியல் பற்றி தினகரனுக்கு தெரியாது. என்னிடம் கேட்டிருந்தால், கன்னியாகுமரி தொகுதியில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறி இருப்பேன்.
தினகரனுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது அவர் மத்திய மந்திரிகளை சந்திக்க முயற்சித்ததாகவும், அது நடக்காத விரக்தியில் இப்படி பேசி இருக்கலாம் என கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் பழகுவது உண்டு. சமீபத்தில் அவர் கட்சி தொடங்கிய பின்பு நான் சந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பேசுவதை வெளியே கொண்டு வருவது அநாகரீகம் என்பதை தினகரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் டோக்கன் கொடுத்தார். நான் கடை வைக்கவில்லை. கடை வைத்திருப்பவர்கள் டோக்கன் கொடுப்பார்கள்.
மீனவ கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்குள்ள மக்கள் என்னை வரவேற்றனர். நாங்கள் 1998 -க்கு பிறகு அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்று இருக்கிறோம்.
வடகிழக்கு மாகாணத்தில் 90 சதவீதம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அங்கு இப்போது பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan #TTVDhinakaran
கன்னியாகுமரி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று நான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை. தேர்தல் நெருங்கும் போது தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அந்த கட்சிகளின் தலைவர்கள் பரபரப்பு கிளப்புவது வாடிக்கை. அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனும் அப்படி பரபரப்பு கிளப்பி உள்ளார்.
கருப்பு முருகானந்தம் அந்த ஊரைச் சேர்ந்தவர். அவருக்கு தினகரனுடன் நல்ல நட்பு உண்டு. பல விஷயங்களுக்கு அவரிடம் பேசி இருக்கலாம். எனக்கு தெரிந்து இது ஒரு நாள் செய்திக்கு பயன்படலாம். மற்றபடி எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை.

தினகரனுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது அவர் மத்திய மந்திரிகளை சந்திக்க முயற்சித்ததாகவும், அது நடக்காத விரக்தியில் இப்படி பேசி இருக்கலாம் என கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் பழகுவது உண்டு. சமீபத்தில் அவர் கட்சி தொடங்கிய பின்பு நான் சந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பேசுவதை வெளியே கொண்டு வருவது அநாகரீகம் என்பதை தினகரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் டோக்கன் கொடுத்தார். நான் கடை வைக்கவில்லை. கடை வைத்திருப்பவர்கள் டோக்கன் கொடுப்பார்கள்.
மீனவ கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்குள்ள மக்கள் என்னை வரவேற்றனர். நாங்கள் 1998 -க்கு பிறகு அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்று இருக்கிறோம்.
வடகிழக்கு மாகாணத்தில் 90 சதவீதம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அங்கு இப்போது பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan #TTVDhinakaran
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் தொகுதியில் உலகிலேயே மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே வாக்கினை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #Jyotiamge
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 11ம் தேதி) துவங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று காலை 7 மணி முதலே அம்மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜோதி அம்கே ஜோதி அம்கே வாக்களித்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாரஷ்டிரா மாநிலத்தில் 3 மணி நிலவரப்படி 38.35% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Jyotiamge

இதேப்போல் மக்களும் காலை 7 மணி முதல் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் உலகின் மிகவும் குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே (26) மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை மகிழ்ச்சியுடன் வாக்களித்தார்.
உலகின் மிகவும் குள்ளமான ஜோதி அம்கே கின்னஸ், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரது உயரம் 62.8 செ.மீ ஆகும்.

ஜோதி அம்கே ஜோதி அம்கே வாக்களித்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாரஷ்டிரா மாநிலத்தில் 3 மணி நிலவரப்படி 38.35% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Jyotiamge
எடப்பாடிக்கு கருணாநிதி மீது திடீர் பாசம் ஏன்? என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். #LokSabhaElections2019 #Vaiko
ஈரோடு:
ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் பகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
மத்தியில் உள்ள ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும். மத்திய அரசு பாசிச வெறியாட்டம் ஆடிவருகிறது.
மகாத்மா காந்தியின் உருவபொம்மையை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் துப்பாக்கியால் சுடுகிறது. கோட்சேக்கு நாடு முழுவதும் சிலை வைக்கப்போவதாகவும் அந்த கும்பல் கூறுகிறது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வேடிக்கைதான் பார்த்தது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறியவரே துணை முதல்வர் ஓ.பி.எஸ்.தான் அவரிடம் விசாரணை நடத்த இந்த அரசு தயாரா? இன்று கலைஞர் மீது எடப்பாடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. அவரை பற்றியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். ஏதோ விசாரணை நடத்தப் போகிறாராம். கலைஞரை ஸ்டாலின் பெற்ற பிள்ளையைபோல் பார்த்து கொண்டார். ஏன்.. பிரதமர் மோடி உள்பட அனைவரும் அவரை பார்த்து சென்றவர்கள்தானே?
கலைஞர் மறைந்த பிறகு ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் மெரினாவில் இடம் கேட்டு வந்தார்களே... முடியாது என்று சொன்னவர்கள்தானே... நீங்கள்? இப்போது மட்டும் கலைஞர் மீது பாசம் வந்துவிட்டதா?
தி.மு.க. வக்கீல்கள் போராடி வாதாடி மெரினாவில் இடம் வாங்கி கொடுத்தார்கள். தமிழகத்தில் 18 சட்டசபை இடைத்தேர்தலோடு மேலும் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் மத்தியில் மட்டுமல்ல... மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்.
இவ்வாறு வைகோ பேசினார். #LokSabhaElections2019 #Vaiko

இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என மஜ்லிஸ்கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan
ஐதராபாத்:
இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியா போன்ற சிறந்த நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதற்கு இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என்று ஒவைசி கூறினார்.
தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan
இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி, இன்று வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக இம்ரான் கான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan
ஊழல் செய்ய முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் மக்களிடம் பீதியை பரப்புவதாக பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
பாட்னா:
பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் பகல்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனியும் சிலரால் ஊழல்செய்ய முடியாது. வாரிசு அரசியலுக்கு முடிவுக்கு வந்து விடும். இதனால் அச்சம் ஏற்பட்டுள்ள அவர்கள் மக்களிடம் பீதியை பரப்புகின்றனர்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்காது. அனைத்து அரசியல் சாசன அமைப்புகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும். இட ஒதுக்கீடு இனி இருக்காது என்றெல்லாம் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
நான் மக்களின் காவலன். அம்பேத்கார் கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறையை நான் மேலும் வலுப்படுத்தி காப்பாற்றுவேன்.
நமது பாதுகாப்பு படையினருக்குள்ள அதிகாரத்தை பறித்து விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ஆனால் பாரதிய ஜனதா அரசு நக்சலைட்டுகள், பயங்கரவாதிகளை ஒடுக்க அனைத்து அதிகாரங்களையும் பாதுகாப்பு படைக்கு வழங்கி உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #BJP #PMModi

புதிய பட அறிவிப்பு வரும்போது மட்டுமே ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறினார். #LokSabhaElections2019 #MansoorAliKhan
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றி வித்தியாசமான முறையில் பிரசரம் செய்து வருகிறார்.
சூ பாலீஷ் போடுவது, புரோட்டா செய்வது, டீ போடுவது, தெருக்களை கூட்டுவது, டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என விதவிதமான முறையில் பிரசாரம் செய்து பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.
மேலும் பொதுக்கூட்டத்தில் விவசாயி போல் உடையணிந்து வந்தார். தொகுதிக்குள் பொதுமக்களிடம் உரிமையாக பேசி பழகி அவர்களது கஷ்ட நஷ்டங்களை கேட்டு வருகிறார்.
ஆத்தூர், பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மன்சூர்அலிகான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் இருந்த கடையில் கம்பங்கூழ் வாங்கி பருகினார். மேலும் கம்பங்கூழை பொதுமக்களுக்கு விற்பனை செய்தார். வியாபாரம் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார்.
பொதுமக்களிடையே பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சினை. எனவே என்னை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் செந்துறை, குடகனாறு பகுதியில் அணை கட்டி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்.

புதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பூஞ்சோலை பகுதியில் மன்சூர் அலிகானை கண்டதும் அப்பகுதி வாலிபர்கள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். #LokSabhaElections2019 #MansoorAliKhan

மற்ற கூட்டணிகள் எல்லாம் 500, 1000 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சேர்ந்துள்ளனர். ஆனால் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களில் ஒருவனாக இருப்பேன். உங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

புதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பூஞ்சோலை பகுதியில் மன்சூர் அலிகானை கண்டதும் அப்பகுதி வாலிபர்கள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். #LokSabhaElections2019 #MansoorAliKhan
உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிரிதி இரானி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
அமேதி:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய அமேதி தொகுதியை அடைந்த ஸ்மிரிதி இரானி, பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டார். வாகனத்தில் சென்ற அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ஸ்மிர்தி இரானியுடன் உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.
இந்த ஊர்வலம் தேர்தல் அலுவலகத்தில் நிறைவடைந்ததும் ஸ்மிரிதி இரானி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை ஸ்மிரிதி இரானி தேர்தலில் வெற்றி பெற வேண்டி, தனது கணவர் சுபீன் இரானியுடன் இணைந்து பூஜை நடத்தினார்.

அதன் பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய அமேதி தொகுதியை அடைந்த ஸ்மிரிதி இரானி, பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டார். வாகனத்தில் சென்ற அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ஸ்மிர்தி இரானியுடன் உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.
இந்த ஊர்வலம் தேர்தல் அலுவலகத்தில் நிறைவடைந்ததும் ஸ்மிரிதி இரானி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்று வடசென்னை திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #KalanidhiVeerasamy
சென்னை:
வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். இப்போது வீடு வீடாக வந்து உங்களிடம் ஆதரவு கேட்பது போல தேர்தலில் வென்றதும் உங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை, கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். எனவே என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என கூறினார்.
பிரசாரத்தின் போது அவருடன் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #KalanidhiVeerasamy