search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election campagin"

    ஊழல் செய்ய முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் மக்களிடம் பீதியை பரப்புவதாக பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
    பாட்னா:

    பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் பகல்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனியும் சிலரால் ஊழல்செய்ய முடியாது. வாரிசு அரசியலுக்கு முடிவுக்கு வந்து விடும். இதனால் அச்சம் ஏற்பட்டுள்ள அவர்கள் மக்களிடம் பீதியை பரப்புகின்றனர்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்காது. அனைத்து அரசியல் சாசன அமைப்புகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும். இட ஒதுக்கீடு இனி இருக்காது என்றெல்லாம் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

    நான் மக்களின் காவலன். அம்பேத்கார் கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறையை நான் மேலும் வலுப்படுத்தி காப்பாற்றுவேன்.

    நமது பாதுகாப்பு படையினருக்குள்ள அதிகாரத்தை பறித்து விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ஆனால் பாரதிய ஜனதா அரசு நக்சலைட்டுகள், பயங்கரவாதிகளை ஒடுக்க அனைத்து அதிகாரங்களையும் பாதுகாப்பு படைக்கு வழங்கி உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
    வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே சென்ற போது காரில் இருந்து கீழே இறங்கிய மு.க.ஸ்டாலின் நடந்து சென்று சாலையின் இரு புறமும் நின்ற மக்களிடம் கை குலுக்கி வாக்கு சேகரித்தார். #LSPolls #DMK #MKStalin
    வத்தலக்குண்டு:

    தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டுவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.

    கூட்டம் முடிந்த உடன் தேனி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வத்தலக்குண்டு வழியாக மு.க.ஸ்டாலின் காரில் சென்றார். வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே சென்ற போது காரில் இருந்து கீழே இறங்கி மு.க.ஸ்டாலின் நடந்து சென்றார். சாலையின் இரு புறமும் நின்ற மக்களிடம் கை குலுக்கி வாக்கு சேகரித்தார்.

    மேலும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுனர்களுக்கும் கை குலுக்கி வாக்கு சேகரித்தார். கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பெண்கள் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    தன்னை காண காத்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஸ்டாலின் காரில் இருந்து கீழே இறங்கி சந்தித்து பேசியது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  #LSPolls #DMK #MKStalin
    ×