என் மலர்
தேர்தல் செய்திகள்
திருவொற்றியூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான ஏ.ஜி. மவுரியா பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #MNM
சென்னை:
வடசென்னை பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஏ.ஜி.மவுரியா தொகுதி முழுவதும் எளிமையான முறையில் பிரசாரம் செய்து வருகிறார். வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், திருவொற்றியூர் குப்பம், மார்க்கெட் காலடிப்பேட்டை மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்த மவுரியா அப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை பற்றி கேட்டறிந்தார்.
தெற்கு பகுதியில் இருந்து வரும் ரெயில்கள் தாம்பரத்தில் நின்று செல்வதுபோல, வடக்கில் இருந்து வரும் ரெயில்கள் திருவொற்றியூரில் நிற்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார். மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
டார்ச் லைட் சின்னத்துடன் ஆடம்பரமின்றி மவுரியா எளிமையாக பிரசாரம் செய்வது மக்களை கவர்ந்துள்ளது. #LokSabhaElections2019 #MNM

இந்தியா முழுவதும் முக்கிய மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து குறைந்தபட்சம் 100 பொதுக்கூட்டங்களில் பிரியங்கா பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. #LoksabhaElections2019 #Priyankagandhi #Congress
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்ட பிரியங்கா உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக உள்ளார்.
அந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் முதல் அந்த 42 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் 42 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு ஆதரவு இல்லாத தொகுதிகளாகும். இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் அந்த தொகுதிகளின் வழியாக ஓடும் கங்கையில் பிரியங்கா படகு பயணம் செய்து பிரசாரம் செய்தார்.
அதன் பலனாக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முன்பு இருந்ததை விட 4 சதவீதம் ஆதரவு அதிகரித்து இருப்பதாக ஒரு சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள பிரியங்கா தொடர்ந்து 42 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பிரியங்காவுக்கு அமோக ஆதரவு கிடைப்பதால் தங்கள் தொகுதிக்கும் பிரியங்கா வந்தால் எளிதான வெற்றியை பெற முடியும் என்று நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து தங்கள் மாநிலத்திற்கு வருமாறு காங்கிரஸ் தலைவர்கள் போட்டி போட்டு பிரியங்காவுக்கு அழைப்பு விடுத்தனர்.
பிரியங்கா முதலில் அந்த அழைப்புகளை ஏற்கவில்லை. உத்தரபிரதேசத்தில் மட்டுமே பிரசாரம் செய்யப்போவதாக அவர் கூறியிருந்தார். என்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரை விடவில்லை. சமரசம் செய்து மற்ற மாநிலங்களிலும் அவரை பிரசாரம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளனர்.
பிரியங்கா இதுவரை உத்தரபிரதேசம் தவிர வேறு மாநிலத்திற்கு சென்று பிரசாரம் செய்யவில்லை. கடந்த 4-ந்தேதி அவர் கேரளா மாநிலம் வயநாடு தொகுதிக்கு ராகுலுடன் சென்று இருந்தார். அப்போது தனக்கு கிடைத்த ஆரவாரமான வரவேற்பை கண்டு பிரியங்கா நெகிழ்ந்து போனார்.
இதையடுத்தே அவர் நாடு முழுவதும் பிரசாரத்திற்கு முழு மனதுடன் சம்மதித்துள்ளார். அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர்கள் விடுத்துள்ள அழைப்பின் பேரில் எந்தெந்த மாநிலத்திற்கு செல்லலாம் என்ற பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பிரியங்கா இந்தியா முழுவதும் முக்கிய மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிரடி பிரசாரம் செய்வார் என்று தெரிய வந்துள்ளது. குறைந்தபட்சம் 100 பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசம் மாநிலம் தவிர கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களிலும் அதிக கூட்டங்களில் பேச பிரியங்கா முடிவு செய்துள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் கணிசமான அளவுக்கு தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 5 மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாலே போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வந்து விட முடியும் என்று வியூகத்துடன் இந்த மாநிலங்களில் பிரியங்கா கவனம் செலுத்த உள்ளார். இந்த 5 மாநிலங்களில் சமீப காலமாக காங்கிரசுக்கு ஆதரவான நிலைபாடு உருவாகி இருக்கிறது.
இந்த நிலையை முழுமையாக காங்கிரசுக்கு ஆதரவாக மாற்றும் சக்தி ராகுலை விட பிரியங்காவுக்கே இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் கருதுகிறார்கள். எனவேதான் இந்த 5 மாநிலங்களில் ராகுலை விட அதிக கூட்டங்களில் பிரியங்காவை பேச வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #Priyankagandhi #Congress

நான் பயந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன். தமிழகம் தான் எங்கள் இலக்கு என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #KamalHaasan
திருவண்ணாமலை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருவண்ணாமலை, ஆரணியில் அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் 37 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 37 ஆண்டுகளாக நற்பணி மன்றங்கள் அமைத்து உதவிகள் செய்து வந்தோம்.
இந்த தேர்தல் நமக்கு இல்லை என முடிவு செய்தேன். ஆனால் இந்த தேர்தலில் கண்டிப்பாக தமிழக மக்களின் நலனில் அக்கறையை கருத்தில் கொண்டு களத்தில் இறங்கி உள்ளோம்.
இந்த தேர்தலில் நான் பயத்தில் போட்டியிடவில்லை என்கிறார்கள். நான் பயந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன். தமிழகம் தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் நானே நிற்பதாக நினைத்து கொள்ளுங்கள். எங்களது வேட்பாளர்கள் உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறார்கள்.
அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் சரியாக செயல்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தால் அதன் மீது விசாரணை நடத்தி எங்களது எம்.பி.க்களின் ராஜினாமா கடிதம் உங்களை வந்தடையும்.
இந்த ஊருக்கு பட்டு ஜவுளி பூங்கா அமைத்து தருவதாக உறுதி அளித்தார்கள், செய்தார்களா? திண்டிவனத்தில் இருந்து ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரிக்கு செல்லும் ரெயில் பாதை திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.
இதுவரை அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்களா? இங்கு அரசு கலைக்கல்லூரி இல்லை. ஆனால் தனியாருக்கு கல்வியை தாரை வார்த்ததால் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு சென்றார்கள். பார்த்தீர்களா?
சாராயத்தை கொண்டே ஆட்சியை நடத்துகிறார்கள். அந்த துறையையும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிக்கிறார். ஒரு நாட்டிற்கு முக்கியமானவை கல்வி, மருத்துவம், சுகாதாரம். ஆனால் இவற்றை தனியாருக்கு கொடுத்துவிட்டனர்.
கல்வியை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தரமான இலவச கல்வியை கொடுக்க முடியும். இடம் கொடுத்தால் நாங்கள் செய்து காட்டுவோம்.
எங்களை நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். நாளைய தமிழகத்துக்கு நீங்கள் தான் மாற்றத்துக்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். காமராஜர் போன்ற நல்லவர்கள் ஆட்சியை பார்த்து வெகு காலமாகிவிட்டது. நாங்கள் அவர்களின் பாதையில் பயணிப்போம்.
‘மக்களை பார்த்து சுடு’ என காவல்துறையை ஏவலாக மாற்றியது இந்த அரசு. தூத்துக்குடி சம்பவம் மறக்கமுடியுமா? மறக்க முடியாது. மனதில் பதிந்துள்ளது.
புயல் அடிக்கும்போது பிரதமர் எங்கு சென்றார். ஆனால் தற்போது 4-வது முறையாக வருகிறார். ‘கோ பேக்’ என்று கூறினாலும் அவர் ‘கம் பேக்’ என்று வந்து கொண்டிருக்கிறார். டெல்லியில் யார் வந்தாலும் தமிழகத்துக்கு பதில் கூறவேண்டும். மாற்றத்தை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும். எங்களால் இந்தியாவில் ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #KamalHaasan

தேர்தல் தொடர்பான விவகாரங்களில் இனி, டி.ஜி.பி. ராஜேந்திரன் தலையிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Loksabhaelections2019 #DGPRajendran #ElectionCommission
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதில் எந்தவிதமான நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் டி.ஜி.பி. ராஜேந்திரனை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேர்தல் தொடர்பான விவகாரங்களில் இனி, டி.ஜி.பி. ராஜேந்திரன் தலையிடக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதில் புதிய தேர்தல் டி.ஜி.பி.யாக அசு தோஸ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளை இனி, அசுதோஸ் சுக்லாதான் மேற்கொள்வார் என்றும், தேர்தல் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளும், இனி அவரைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #DGPRajendran #ElectionCommission

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SoniaGandhi
ரேபரேலி:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக இன்று ரேபரேலி தொகுதியை அடைந்த சோனியா காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக புறப்பட்டார். காரில் சென்ற சோனியாவிற்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற வேண்டி, இன்று காலை பூஜை நடத்தினார். அப்போது சோனியா காந்தியுடன் அவரது மகள் மற்றும் உத்தரபிரதேசம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, மற்றும் மகன் ராகுல் காந்தியும் உடன் இருந்தனர்.
இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி, இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது ராகுல் காந்தி , பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர். சோனியா காந்தி போட்டியிடுவதை முன்னிட்டு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் அந்த தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SoniaGandhi

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் 5வது முறையாக போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் வரும் மே 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்காக இன்று ரேபரேலி தொகுதியை அடைந்த சோனியா காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக புறப்பட்டார். காரில் சென்ற சோனியாவிற்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற வேண்டி, இன்று காலை பூஜை நடத்தினார். அப்போது சோனியா காந்தியுடன் அவரது மகள் மற்றும் உத்தரபிரதேசம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, மற்றும் மகன் ராகுல் காந்தியும் உடன் இருந்தனர்.
இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி, இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது ராகுல் காந்தி , பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர். சோனியா காந்தி போட்டியிடுவதை முன்னிட்டு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் அந்த தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SoniaGandhi
40 தொகுதிகளிலும் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
பெங்களூரு:
மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரிஸ்வான் ஹர்ஷத்தை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா என்று பார்க்காமல் தீய சக்தி, நல்ல சக்தி என்று தேர்தலை பார்க்க வேண்டும். பா.ஜனதா என்றாலே தீய சக்தி தான்.
பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். கியாஸ் விலை உயர்ந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் கியாஸ் சிலிண்டரின் விலை என்ன?. மோடியின் ஆட்சியில் அதன் விலை என்ன என்பதை நீங்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும்.
பொதுவாக தாய்மார்கள் கணவர்களுக்கு தெரியாமல் சமையல் அறையில் பணத்தை மறைத்து வைப்பார்கள். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு ஒரே இரவில் பணம் அனைத்தும் செல்லாது என கூறி அனைத்து பணத்தையும் குப்பையாக மாற்றினார்.
பின்னர் பணத்துக்காக மக்கள் ஏ.டி.எம். வாசலில் காத்து நின்றனர். அவ்வாறு வரிசையில் காத்து நின்றபோது 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
பா.ஜனதா என்றால் மோடி மட்டுமே. ஆனால் காங்கிரஸ் என்பது ஒரு கூட்டம். மோடி தமிழ்நாடு என்றாலே வெறுக்கிறார். தமிழ் நாட்டில் புயல் பாதிப்பின் போது மோடிக்கு தமிழ்நாடு மீது அக்கறை வரவில்லை. தற்போது தேர்தல் வருவதால் மோடி தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பது போல் நடித்து வருகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். இதுவரை ஒருவர் வங்கி கணக்கிலும் ஒரு பைசா கூட செலுத்தவில்லை. அதனால் பொய் கூறிவரும் மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்.
ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி புயல் பாதித்தபோது எங்கே இருந்தார்? முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்புவதால் தமிழக மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்களா?
கேரளாவிற்கு சென்று ஐயப்பா என்று கூறுவதாலும் பா.ஜனதாவுக்கு வாக்குகள் கிடைத்து விடாது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடிப்பை தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் நம்பப் போவதில்லை.
தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிட்டு உள்ள 5 தொகுதிகளிலும் நோட்டாவை விட குறைவான வாக்கே கிடைக்கும்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை, தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என்ற ரீதியில் கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என்று சமீபத்தில் கூறி இருந்தார்.
அ.தி.மு.க.வில் விஞ்ஞானிகள் அதிகம். ஏரி நீர் ஆவியாக மாறுவதை தடுப்பதற்கு தெர்மாகோல் தடுப்பு அமைக்க நடந்த முயற்சி அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளதால் தமிழிசைக்கும் அதன் பாதிப்பு வந்துவிட்டது.
எந்த காலத்திலும் தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்றாது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ் பதவியேற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Kushboo

ஓட்டுக்கு பணம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்குச் சாவடிகள் முன்பும் விளம்பர பலகைகள் வைக்க கோரிய பொதுநல வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #LoksabhaElections2019 #HighCourt
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
பூந்தமல்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழக அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் தேர்தலுக்கு பின்பு வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார். இது மறைமுகமாக தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மிரட்டுவதற்கு சமமாகும்.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குகளை பெற வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணம் வழங்குவது தேர்தல் நடைமுறையை கேலிக்கூத்தாக்கி விடும்.
தமிழகம் முழுவதும் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.500 பணமாக வழங்குவதாகவும், இது தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுகிறது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்கு சாவடிகளிலும் விளம்பர பலகைகள் வைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.
இதேபோன்ற கோரிக்கைகளுடன் வக்கீல் ரமேஷ் என்பவரும் வழக்கு தொடர்ந்தார். அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கும், பணப்பட்டுவாடா குறித்த புகார்களில் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், துண்டறிக்கைகள் வழங்கி வருவதாகவும் கூறினார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #LoksabhaElections2019 #HighCourt

அமேதி மனுதாக்கலின்போது ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. #Congress #RahulGandhi
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக அவர் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ நடத்தினார்.

இந்த நிலையில் ராகுல் நடத்திய அந்த ரோடு ஷோவில் அவரை கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன.
அமேதி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து விட்டு வந்தபிறகு ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.
ராகுலை நோக்கி மீண்டும் லேசர் கதிர்கள் பாய்ந்தன. பச்சை நிறத்தில் வந்த அந்த லேசர் கதிர்கள் அவரது தலை மீது குறி பார்த்து வந்தன.
7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தது. நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் மத்திய உள்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
காங்கிரசின் இந்த புகார் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக அவர் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ நடத்தினார்.
அந்த ரோடு ஷோவில் அவரது சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, அவர்களது மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த ரோடு ஷோவின் போது ராகுல் மீது சாலையின் இரு புறமும் திரண்டிருந்த தொண்டர்கள் மலர்களை தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மிக எழுச்சியுடன் இந்த ரோடு ஷோ நடந்து முடிந்தது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன.
அமேதி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து விட்டு வந்தபிறகு ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.
ராகுலை நோக்கி மீண்டும் லேசர் கதிர்கள் பாய்ந்தன. பச்சை நிறத்தில் வந்த அந்த லேசர் கதிர்கள் அவரது தலை மீது குறி பார்த்து வந்தன.
7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தது. நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் மத்திய உள்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
காங்கிரசின் இந்த புகார் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #RahulGandhi
தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #LokSabhaelections2019 #Congress #PChidambaram
சென்னை:
முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மோடி ஆட்சியில் நமது நாடு பாதுகாப்பாக இருந்தது போலவும், 2004-ல் இருந்து 2014வரை மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது நாடு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது போலவும் கட்டு கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்த போரும் நடக்கவில்லை. போர் பதட்ட சூழ்நிலையும் ஏற்படவில்லை. எல்லை பாதுகாப்பான நிலையில் இருந்தது.
பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்து இருந்தது. பாதுகாப்பு படை வீரர்கள், பொது மக்கள் உயிரிழப்பு குறைந்து இருந்தது.
ஆனால் மோடி ஆட்சியில் ஊடுருவல் அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் பொது மக்கள் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. எப்போதும் போர் பதட்ட சூழ்நிலை நிலவுகிறது. எல்லையில் வசிக்கும் 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி எதையாவது சொல்லலாம். ஆனால் நாடு மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக நான் கருத வில்லை.
வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுவதை நான் ஏற்கவில்லை. பொதுவாக கருத்து கணிப்புகளை நான் நம்புவதில்லை. கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகி உள்ளன. எதிர்காலத்திலும் இது தவறாகத்தான் போகும்.
இந்த பாராளுமன்ற தேர்தல் என்பது 30 மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் சூழ்நிலையில் நடக்கிறது.
இந்த 30 மாநிலங்களில் 10 மாநிலத்தில் காங்கிரசை பாரதிய ஜனதா நேரடியாக எதிர்க்கிறது. 10 மாநிலங்களில் மாநில கட்சிகள் எதிர்க்கின்றன. மற்ற 10 மாநிலங்கள் சிறியவை. இவற்றை ஒட்டு மொத்தமாக கருத்து கணிப்பு மூலம் சொல்லிவிட முடியாது.
கருத்து கணிப்புகள் சரியாக இருக்கும் என்று கருதினால் ஏன் தேர்தல் நடத்த வேண்டும். கருத்து கணிப்பு நடத்தி அதன் அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து விடலாமே?
உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி வலுவாக உள்ளது. காங்கிரஸ் அங்கு வலுவான நிலையில் போட்டியிடுகிறது. அங்கு பாரதிய ஜனதாவை முந்தி எதிர்பாராத வெற்றிகளை நாங்கள் பெறுவோம்.

உத்தரபிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பே நாங்கள் கூட்டணி வைக்க முயற்சித்தோம். ஆனால் மாயாவதி அதை விரும்பவில்லை. தேர்தல் முடிந்ததும் எங்கள் அணிக்கு மாயாவதி வருவார் என்று ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறி இருக்கிறார். தேர்தல் முடிவுகள் வந்ததும் மாயாவதி இறங்கி வருவார். எங்களுடன் கூட்டணி அமைப்பார்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதே எண்ணிக்கையில்தான் கடந்த காலத்திலும் போட்டியிட்டது.
தமிழ்நாட்டில் நாங்கள் அதிகபட்சமாக வளைந்து கொடுத்தோம். 9 இடங்களில் மட்டும் போட்டியிடுகிறோம். தி.மு.க. குறைந்தபட்சம் 20 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். இதற்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள்.
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசுடன் 48 இடங்களை சமமாக பகிர்ந்து கொண்டுள்ளோம். கர்நாடகாவிலும், காஷ்மீரிலும் வளைந்து கொடுத்து கூட்டணி ஏற்படுத்தி உள்ளோம். பீகார், ஜார்கண்டிலும் திருப்தியான கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறோம்.
கேரளாவில் கம்யூனிஸ்டை எதிர்த்து ராகுல் போட்டியிடுவதை தவறானதாக கருத முடியாது. ராகுல் போட்டியிடவில்லை என்றால் வேறு ஒரு காங்கிரஸ்காரர் போட்டியிட போகிறார்.
பாரதிய ஜனதா மட்டும் தான் இந்துக்களுக்கான கட்சி என்பது போன்ற கருத்தை திணிக்க பார்க்கிறார்கள். நாங்கள் இந்துக்கள் மட்டும் அல்லாமல் அனைத்து மதத்தினருக்கும் குரல் கொடுக்கும் கட்சியாக இருக்கிறோம். மோடியும், அமித்ஷாவும் கோவிலுக்கு சென்றால் யாரும் அதை பற்றி பேசுவது இல்லை. ராகுலும், பிரியங்காவும் கோவிலுக்கு சென்றால் அதை அரசியலாக்க பார்க்கின்றனர். பிரசாரம் செய்யும் இடங்களில் அந்தபகுதி மக்கள் அழைப்பதால் வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெளிவாக உள்ளது. ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் குழப்பமான நிலையில் இருக்கிறது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #LokSabhaelections2019 #Congress #PChidambaram
முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மோடி ஆட்சியில் நமது நாடு பாதுகாப்பாக இருந்தது போலவும், 2004-ல் இருந்து 2014வரை மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது நாடு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது போலவும் கட்டு கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்த போரும் நடக்கவில்லை. போர் பதட்ட சூழ்நிலையும் ஏற்படவில்லை. எல்லை பாதுகாப்பான நிலையில் இருந்தது.
பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்து இருந்தது. பாதுகாப்பு படை வீரர்கள், பொது மக்கள் உயிரிழப்பு குறைந்து இருந்தது.
ஆனால் மோடி ஆட்சியில் ஊடுருவல் அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் பொது மக்கள் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. எப்போதும் போர் பதட்ட சூழ்நிலை நிலவுகிறது. எல்லையில் வசிக்கும் 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி எதையாவது சொல்லலாம். ஆனால் நாடு மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக நான் கருத வில்லை.
வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுவதை நான் ஏற்கவில்லை. பொதுவாக கருத்து கணிப்புகளை நான் நம்புவதில்லை. கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகி உள்ளன. எதிர்காலத்திலும் இது தவறாகத்தான் போகும்.
இந்த பாராளுமன்ற தேர்தல் என்பது 30 மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் சூழ்நிலையில் நடக்கிறது.
இந்த 30 மாநிலங்களில் 10 மாநிலத்தில் காங்கிரசை பாரதிய ஜனதா நேரடியாக எதிர்க்கிறது. 10 மாநிலங்களில் மாநில கட்சிகள் எதிர்க்கின்றன. மற்ற 10 மாநிலங்கள் சிறியவை. இவற்றை ஒட்டு மொத்தமாக கருத்து கணிப்பு மூலம் சொல்லிவிட முடியாது.
கருத்து கணிப்புகள் சரியாக இருக்கும் என்று கருதினால் ஏன் தேர்தல் நடத்த வேண்டும். கருத்து கணிப்பு நடத்தி அதன் அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து விடலாமே?
உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி வலுவாக உள்ளது. காங்கிரஸ் அங்கு வலுவான நிலையில் போட்டியிடுகிறது. அங்கு பாரதிய ஜனதாவை முந்தி எதிர்பாராத வெற்றிகளை நாங்கள் பெறுவோம்.

தொகுதி பங்கீட்டில் பாரதிய ஜனதா விட்டுக் கொடுத்து சென்றதாகவும் காங்கிரஸ் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் கூறுவது தவறு.
தமிழ்நாட்டில் நாங்கள் அதிகபட்சமாக வளைந்து கொடுத்தோம். 9 இடங்களில் மட்டும் போட்டியிடுகிறோம். தி.மு.க. குறைந்தபட்சம் 20 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். இதற்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள்.
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசுடன் 48 இடங்களை சமமாக பகிர்ந்து கொண்டுள்ளோம். கர்நாடகாவிலும், காஷ்மீரிலும் வளைந்து கொடுத்து கூட்டணி ஏற்படுத்தி உள்ளோம். பீகார், ஜார்கண்டிலும் திருப்தியான கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறோம்.
கேரளாவில் கம்யூனிஸ்டை எதிர்த்து ராகுல் போட்டியிடுவதை தவறானதாக கருத முடியாது. ராகுல் போட்டியிடவில்லை என்றால் வேறு ஒரு காங்கிரஸ்காரர் போட்டியிட போகிறார்.
பாரதிய ஜனதா மட்டும் தான் இந்துக்களுக்கான கட்சி என்பது போன்ற கருத்தை திணிக்க பார்க்கிறார்கள். நாங்கள் இந்துக்கள் மட்டும் அல்லாமல் அனைத்து மதத்தினருக்கும் குரல் கொடுக்கும் கட்சியாக இருக்கிறோம். மோடியும், அமித்ஷாவும் கோவிலுக்கு சென்றால் யாரும் அதை பற்றி பேசுவது இல்லை. ராகுலும், பிரியங்காவும் கோவிலுக்கு சென்றால் அதை அரசியலாக்க பார்க்கின்றனர். பிரசாரம் செய்யும் இடங்களில் அந்தபகுதி மக்கள் அழைப்பதால் வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெளிவாக உள்ளது. ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் குழப்பமான நிலையில் இருக்கிறது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #LokSabhaelections2019 #Congress #PChidambaram
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும், 7780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டடுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths
சென்னை:
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:-

வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பிற 13 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அங்கு சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் வாக்களிக்கும் தகுதியுடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.127.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.62 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.284 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை தேர்தல் அதிகாரியின் பேச்சு, வாய்பேச முடியாத மற்றும் காது கேளாதோருக்கும் புரியும் வகையில் சைகை மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 94 ஆயிரத்து 653 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பெண்களுக்கான தனி வாக்குச்சாவடி மையம், தொகுதிக்கு ஒன்று அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7780 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பிற 13 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அங்கு சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் வாக்களிக்கும் தகுதியுடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.127.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.62 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.284 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை தேர்தல் அதிகாரியின் பேச்சு, வாய்பேச முடியாத மற்றும் காது கேளாதோருக்கும் புரியும் வகையில் சைகை மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths
வேலூரில் இரட்டை விரலை காட்டி சைகை மூலம் வாக்கு சேகரித்ததால், பிரேமலதா விஜயகாந்தின் பேச்சை கேட்க ஆவலாக அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு 9 மணியளவில் வேலூர் சார்பனாமேட்டில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் இரவு 10.15 மணிக்கு தான் சார்பனாமேட்டிற்கு வந்தார் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இரவு 10 மணிக்கு மேல் மைக் மூலம் வாக்கு சேகரிக்க கூடாது என்பதால், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் தங்கள் கைகளை உயர்த்தி இரட்டை விரலை காட்டி சைகை மூலம் வாக்கு சேகரித்தனர். பிரேமலதா விஜயகாந்தின் பேச்சை கேட்க ஆவலாக அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முன்னதாக குடியாத்தம், வாணியம்பாடியில் அவர் பேசியதாவது:-
இந்த கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறும். இந்த கூட்டணி என்றைக்கும் ஆட்சிக்கு பக்க பலமாக இருக்கும்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தே.மு.தி.க.வை கேவலப்படுத்த நினைத்தார். கடவுள் உங்களை கேவலப்படுத்தி விட்டார். ஒட்டுமொத்த வேலூர் மக்களுக்கும் உங்கள் நிலை தெரிந்து விட்டது. பாதாளத்தில் தோண்ட தோண்ட பணம் வருகிறது.
அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க.கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதற்காக அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, த.மா.கா, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும், இளைஞர்களும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவர் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு சென்ற உடன் வாணியம்பாடி தொகுதியில் நீண்ட நாட்களாக உள்ள ரெயில்வே பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பார். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கவும், கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சை, தரமான குடிநீர் வசதி, தரமான சாலைகளை அமைத்திடவும் பாடுபடுவார்.
நான் இந்த மாவட்டத்தை சேர்ந்தவள். எனது கணவர் இந்த மாவட்டத்து மருமகன். வாணியம்பாடி மக்களின் அனைத்து கனவுகளையும் நனவாக்க ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth

புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு மு.க.ஸ்டாலின், 3டி யால் மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்படுகிறது என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
புதுச்சேரி:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த புதுச்சேரிக்கு நான் புதிதானவன் அல்ல. புதுச்சேரியும் எனக்கு புதிதல்ல. நான் இங்கு வாக்கு கேட்க மட்டும் வரவில்லை. இந்த மாநிலத்தில் புரட்சி முதல்வராக இருக்கும், இங்கு வந்திருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி கூறவும் தான் வந்தேன். கழக தலைவர் கலைஞர் மறைவிற்கு பின்னர், அவரை கவுரவிக்கும் வகையில் பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
கலைஞருக்கு வெண்கல சிலை, காரைக்காலில் முக்கிய சாலைக்கு கலைஞர் பெயர், மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர் என கூறினார். எனவே அவருக்கு என் நன்றியை இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் முன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுவை மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கலைஞர்.
ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியால் புதுச்சேரி மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. பாஜக தேர்தல் அறிக்கை பொய்யானது. எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மோடியை மோசடி என்றே கூப்பிடுங்கள் என கூறி வருகிறேன். வெளிநாடு பிரதமர் போல் மோடி செயல்படுகிறார். மக்கள் விருப்பப்படி நீங்கள் நடக்க விரும்புவதாக கூறுகிறீர்கள். அப்படி செய்யவேண்டுமென்றால் ஆட்சியை விட்டு விலகுங்கள். அதுவே மக்கள் விருப்பம்.
நாட்டுக்கு மோடி, தமிழகத்திற்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண் பேடி ஆகிய 3 ‘டி’ யினால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர் என்பதே உண்மை.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது: