என் மலர்

  நீங்கள் தேடியது "Amethi Constituency"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமேதி தொகுதியில் தோல்வியடைந்தது தொடர்பாக ஆராய 2 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார்.
  புதுடெல்லி:

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

  அமேதி தொகுதியில் 3 தடவை தொடர்ச்சியாக வென்று எம்.பி.யாக தேர்வான ராகுல் இந்த தடவை வயநாடு தொகுதிக்கு தாவியது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

  அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி போட்டியிட்டார். இந்த தடவை அவரது பிரசாரம் மிக தீவிரமாக இருந்தது. எனவே ராகுல் தோல்வி அடைந்து விடுமோ என்று கருதி வயநாடுக்கு சென்று விட்டதாக விமர்சனம் எழுந்தது.

  அதை உறுதிப்படுத்துவது போல அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியை தழுவினார். அவரை ஸ்மிதிரி ராணி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.வயநாடு தொகுதியில் மட்டுமே அவ ரால் வெற்றி பெற முடிந்தது.  அமேதி தொகுதியானது காங்கிரசின் கோட்டையாக திகழும் தொகுதிகளில் ஒன்றாகும். குறிப்பாக நேரு குடும்பத்தினருக்கு இந்த தொகுதி மிகவும் கை கொடுப்பதாக இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை மக்கள் ராகுலை கைவிட்டது ஏன் என்பது புரியாமல் காங்கிரசார் தவித்து வருகிறார்கள்.

  ராகுலுக்கும் அமேதி மக்கள் தனக்கு வெற்றியை தராதது ஏன் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கு விடை காண்பதற்காக அவர் 2 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

  காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜூபைர்கான், ரேபரேலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.சர்மா இருவரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

  அவர்கள் இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் அமேதி தொகுதிக்கு செல்ல இருக்கிறார்கள். ராகுல் மீது அதிருப்தி ஏற்பட என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது பற்றி அவர்கள் ஆய்வு நடத்துகிறார்கள்.

  அந்த ஆய்வை அவர்கள் அறிக்கையாக தயாரித்து ராகுல்காந்தியிடம் ஒப்படைக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் ராகுல் தன்னை மாற்றிக் கொள்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி பெறுவார் என்று இந்தியா டுடே, சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
  புதுடெல்லி:

  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் கடந்த 19-ந்தேதியுடன் நிறைவு பெற்றது.

  இதைத்தொடர்ந்து வெளியான கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை பா.ஜனதா களம் இறக்கியது.

  ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஸ்மிருதி இரானி தீவிரமாக பிரசாரம் செய்தார். அமேதியில் தோல்வி பயம் ஏற்பட்டு விட்டதால் அவர் வயநாடு தொகுதிக்கு ஓடி விட்டார் என்று பா.ஜனதாவினரும் ஸ்மிருதி இரானியும் பிரசாரம் செய்தனர்.  ஆனால், ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் வெற்றி பெறுவார். அமேதியில் அவர் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரசார் தெரிவித்தனர். என்றாலும் ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானி தீவிரமாக பிரசாரம் செய்தார்.

  அமேதியில் 5-ம் கட்ட தேர்தலாக கடந்த மே-6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது 57,33 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் மாலை முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாயின.

  இந்தியா டுடே, சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறும் போது, “ராகுல்காந்தி அமேதியில் வெற்றி பெறுவார். ஆனால் ஸ்மிருதி இரானி அவருக்கு கடும் போட்டியைத்தருவார். அதனால் வாக்குகள் வித்தியாசம் பயமுறுத்தும் வகையில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். #Sidhu #RahulGandhi

  சண்டிகர்:

  இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசில் மந்திரியாக உள்ளார்.

  இந்த நிலையில் சித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை என்று பா.ஜனதா கூறுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்திய விமானபடைக்கு அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்டது.


  சோனியா காந்தியிடம் இருந்து தேசப்பற்றை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு காங்கிரசை திறமையாக வழிநடத்தினார். அவரது திறமை காரணமாக தான் மத்தியில் காங்கிரஸ் 10 ஆண்டுகள் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதாவுக்கு விசுவாசமாக இருந்ததால் அவர்களை தேசியவாதி என்றும் எதிர்த்தால் தேச விரோதி என்றும் கூறுகிறார்கள்.

  பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றால் நான் அரசியலை விட்டே விலக தயார். ரபேல் விமான விவகாரத்தால் மோடி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவார்

  இவ்வாறு அவர் கூறினார். #Sidhu #RahulGandhi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமேதி மனுதாக்கலின்போது ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. #Congress #RahulGandhi
  புதுடெல்லி:

  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

  வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக அவர் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ நடத்தினார்.

  அந்த ரோடு ஷோவில் அவரது சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, அவர்களது மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த ரோடு ஷோவின் போது ராகுல் மீது சாலையின் இரு புறமும் திரண்டிருந்த தொண்டர்கள் மலர்களை தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மிக எழுச்சியுடன் இந்த ரோடு ஷோ நடந்து முடிந்தது.


  இந்த நிலையில் ராகுல் நடத்திய அந்த ரோடு ஷோவில் அவரை கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

  அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன.

  அமேதி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து விட்டு வந்தபிறகு ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.

  ராகுலை நோக்கி மீண்டும் லேசர் கதிர்கள் பாய்ந்தன. பச்சை நிறத்தில் வந்த அந்த லேசர் கதிர்கள் அவரது தலை மீது குறி பார்த்து வந்தன.

  7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தது. நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வி‌ஷயத்தில் மத்திய உள்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

  காங்கிரசின் இந்த புகார் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சோனியா காந்தி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். #RahulGandhi #LokSabhaElections2019 #RahulNomination
  அமேதி:

  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமேதி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

  இதற்காக இன்று காலை அமேதியை அடைந்த ராகுல் காந்தி, முன்ஷிகஞ்ச்-தர்பிபூர் பகுதியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். திறந்த வாகனத்தில் சென்ற ராகுலுக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரேகன், மகள் மிராயா ஆகியோர் உடன் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி பங்கேற்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமான கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக காரில் சென்றார்.  சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த ஊர்வலம் கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சோனியா காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.

  ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

  இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது. அமேதியில் 5-ஆம் கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #RahulGandhi #LokSabhaElections2019 #RahulNomination
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #RahulGandhi #RahulAmethivisit
  லக்னோ:

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நலத்திட்டங்களை பார்வையிடவும், மக்களின் குறைகளை கேட்டறிவதற்காகவும் வரும் 24-ம் தேதி அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

  இந்த பயணத்தின்போது அமேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த பயணத்தின்போது கவுரிகஞ்ச் நகரில் அமேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அம்மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், காங்கிரஸ் பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் சந்திப்பார் என அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திரா மிஸ்ரா இன்று தெரிவித்துள்ளார். #RahulGandhi #RahulAmethivisit
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் வரும் 4, 5 தேதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். #RahulGandhi #Amethivisit
  புதுடெல்லி:

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகின. ஆனால், மழை மற்றும் இதர அலுவல்கள் காரணமாக அவரது பயண திட்டம் தள்ளிப்போனது.

  இந்நிலையில், வரும் 4 மற்றும் 5-ம் தேதி அமேதி தொதியில் சுற்றுப்பயணம் செய்யும் ராகுல் காந்தி பல்வேறு பிரிவு மக்களை சந்தித்து பேசவுள்ளார்.

  4-ம் தேதி கவுரிகஞ்ச் பகுதியில் சிறு வணிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தும் ராகுல் அன்றிரவு கவுரிகஞ்ச் காங்கிரஸ் அலுவலகத்தில் தங்குகிறார்.

  பின்னர் 5-ம் தேதி தலா கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். மேலும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் புர்ஸத்கஞ்ச் பகுதியில் ஆலோசனை நடத்தும் ராகுல் காந்தி அன்றிரவு டெல்லி திரும்புவார் என அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். #RahulGandhi #Amethivisit  
  ×