என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணம்
    X

    அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணம்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் வரும் 4, 5 தேதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். #RahulGandhi #Amethivisit
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகின. ஆனால், மழை மற்றும் இதர அலுவல்கள் காரணமாக அவரது பயண திட்டம் தள்ளிப்போனது.

    இந்நிலையில், வரும் 4 மற்றும் 5-ம் தேதி அமேதி தொதியில் சுற்றுப்பயணம் செய்யும் ராகுல் காந்தி பல்வேறு பிரிவு மக்களை சந்தித்து பேசவுள்ளார்.

    4-ம் தேதி கவுரிகஞ்ச் பகுதியில் சிறு வணிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தும் ராகுல் அன்றிரவு கவுரிகஞ்ச் காங்கிரஸ் அலுவலகத்தில் தங்குகிறார்.

    பின்னர் 5-ம் தேதி தலா கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். மேலும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் புர்ஸத்கஞ்ச் பகுதியில் ஆலோசனை நடத்தும் ராகுல் காந்தி அன்றிரவு டெல்லி திரும்புவார் என அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். #RahulGandhi #Amethivisit  
    Next Story
    ×