என் மலர்
தேர்தல் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் முதலிடம் பெற்றுள்ளது. #ParliamentElection
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளம் வாக்காளர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடம் பெற்று உள்ளது. அந்த மாநிலத்தில் 20.10 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கின்றனர். அடுத்ததாக உத்தரபிரதேசம் (16.70 லட்சம்), மத்திய பிரதேசம் (13.60 லட்சம்) மாநிலங்கள் அதிக இளம் வாக்காளர்களை கொண்டிருக்கின்றன.

இதைப்போல ராஜஸ்தான் (12.80 லட்சம்), மகாராஷ்டிரா (11.90 லட்சம்), தமிழ்நாடு (8.90 லட்சம்), ஆந்திரா (5.30 லட்சம்) ஆகிய மாநிலங்களும் கணிசமான முதல் முறை வாக்காளர்களை பெற்றிருக்கின்றன. டெல்லியில் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 97,684 என தேர்தல் கமிஷனின் பட்டியல் கூறுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து இருப்பதாக கூறியுள்ள தேர்தல் கமிஷன், இதில் 1.50 கோடி பேர் 18 முதல் 19 வரையிலான வயதை உடையவர்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறது. இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 1.66 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளம் வாக்காளர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடம் பெற்று உள்ளது. அந்த மாநிலத்தில் 20.10 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கின்றனர். அடுத்ததாக உத்தரபிரதேசம் (16.70 லட்சம்), மத்திய பிரதேசம் (13.60 லட்சம்) மாநிலங்கள் அதிக இளம் வாக்காளர்களை கொண்டிருக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து இருப்பதாக கூறியுள்ள தேர்தல் கமிஷன், இதில் 1.50 கோடி பேர் 18 முதல் 19 வரையிலான வயதை உடையவர்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறது. இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 1.66 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection
பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். #ParliamentElection #ErodeConstituency #GaneshaMoorthy
சென்னை:

இந்நிலையில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.
இதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். #ParliamentElection #ErodeConstituency #GaneshaMoorthy
தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதுதவிர ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கழகத்தின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கணேசமூர்த்தி 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். #ParliamentElection #ErodeConstituency #GaneshaMoorthy
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அனுமதி கொடுத்தால் திருச்சி தொகுதியில் போட்டியிடுவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #RahulGadhi
சென்னை:
சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்த தமிழக காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு வாங்கி பணம் செலுத்துவார்கள். அதற்கு பிறகு, 15 பேர் கொண்ட மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர் பார்த்து, ஒரு பட்டியல் தயார் செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். டெல்லியில் தேர்தல் குழு ஒன்று இருக்கிறது. மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர் பரிந்துரைத்தவர்களை பார்த்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்வார்கள். ராகுல்காந்தி அனுமதியுடன் அந்த பட்டியல் வெளியாகும். திருச்சி தொகுதியில் என் பெயர் வந்தால் நான் போட்டியிடுவேன். நான் நிற்க விருப்பப்படுகிறேன். விருப்ப மனு கொடுப்பேன். ராகுல்காந்தி அனுமதி கொடுத்தால் தேர்தலில் நிற்பேன்.

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளும் காங்கிரஸ் விரும்புகிற தொகுதிகள் தான். எங்கள் வேட்பாளர்கள் உள்பட தோழமை கட்சி வேட்பாளர்களும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தான். எல்லோரும் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #RahulGadhi
சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்த தமிழக காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு வாங்கி பணம் செலுத்துவார்கள். அதற்கு பிறகு, 15 பேர் கொண்ட மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர் பார்த்து, ஒரு பட்டியல் தயார் செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். டெல்லியில் தேர்தல் குழு ஒன்று இருக்கிறது. மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர் பரிந்துரைத்தவர்களை பார்த்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்வார்கள். ராகுல்காந்தி அனுமதியுடன் அந்த பட்டியல் வெளியாகும். திருச்சி தொகுதியில் என் பெயர் வந்தால் நான் போட்டியிடுவேன். நான் நிற்க விருப்பப்படுகிறேன். விருப்ப மனு கொடுப்பேன். ராகுல்காந்தி அனுமதி கொடுத்தால் தேர்தலில் நிற்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #RahulGadhi
அரசியல் தலைவரான ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? என ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #StellaMariscollege #RahulinChennai
சென்னை:

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது அரசியல் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? என ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #StellaMariscollege #RahulinChennai
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 13-ம் தேதி தொடங்கினார். முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது அரசியல் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? என ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #StellaMariscollege #RahulinChennai
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர். #LSPolls #CPM #DMK
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

அப்போது, திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவித்தார். #LSPolls #CPM #DMK

இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

நவாஸ்கனி
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவித்தார். #LSPolls #CPM #DMK
பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். #ChandrababuNaidu #KuppamConstituency
திருமலை:
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வருகிற 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அனைத்து கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள சத்தியபிரபா (சித்தூர்), சுகுணம்மா (திருப்பதி), அமர்நாத் ரெட்டி (பலமேனர்) ஆகியோருக்கு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நானி (சந்திரகிரி), அனுஷா ரெட்டி (புங்கனூர்), நல்லாரி கிஷோர்குமார் ரெட்டி (பீலேர்), முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் (மங்களகிரி), நடிகர் பாலகிருஷ்ணா (இந்துபுரம்), கலா வெங்கட்ராவ் (ஈச்சர்லா) உட்பட 130 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. #ChandrababuNaidu #KuppamConstituency

திமுக வேட்பாளர் பட்டியல் வருகிற 17-ந்தேதி வெளியாகும். அதேநாளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #ParliamentElection #DMK #MKStalin
சென்னை:
தி.மு.க. கூட்டணி தொகுதிகளை அறிவித்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளுக்காக மத்திய, மாநில அரசு தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் பல போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்த தோழமை பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.
இந்த கூட்டணி உருவானது பேரத்தின் அடிப்படையிலானது அல்ல. கொள்கையின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி மிகப்பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வேட்பாளர் பட்டியல் வருகிற 17-ந்தேதி வெளியாகும். அதேநாளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினையை அரசியலுக்கு அப்பாற்பட்டு விசாரிக்க வேண்டும்.
ஆனால் இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில் எனது மருமகன் சபரீசன் மீதும், என் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சட்டரீதியாக சந்திக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.
தேர்தல் கமிஷன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. எங்களை பொறுத்தவரை 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இதற்காக நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் 2 வார அவகாசம் வாங்கி உள்ளனர். பொறுத்து இருந்து பார்ப்போம்
கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் ஒரே மேடையில் பங்கேற்றோம். அதுபோல் இனிவரும் பிரசாரக்கூட்டங்களிலும் ஒன்றாக பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதியை ஒதுக்கி உள்ளோம். அத்துடன் பாராளுமன்ற மேல்-சபையிலும் ஒரு எம்.பி.பதவி வழங்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்.
பேட்டியின்போது கூட்டணி கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் உடன் இருந்தனர். #ParliamentElection #DMK #MKStalin

தி.மு.க. தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு தனியாகவும், சட்டசபை இடைத்தேர்தலுக்கு தனியாகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியிடப்படும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினையை அரசியலுக்கு அப்பாற்பட்டு விசாரிக்க வேண்டும்.
ஆனால் இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில் எனது மருமகன் சபரீசன் மீதும், என் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சட்டரீதியாக சந்திக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.
தேர்தல் கமிஷன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. எங்களை பொறுத்தவரை 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இதற்காக நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் 2 வார அவகாசம் வாங்கி உள்ளனர். பொறுத்து இருந்து பார்ப்போம்
கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் ஒரே மேடையில் பங்கேற்றோம். அதுபோல் இனிவரும் பிரசாரக்கூட்டங்களிலும் ஒன்றாக பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதியை ஒதுக்கி உள்ளோம். அத்துடன் பாராளுமன்ற மேல்-சபையிலும் ஒரு எம்.பி.பதவி வழங்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்.
பேட்டியின்போது கூட்டணி கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் உடன் இருந்தனர். #ParliamentElection #DMK #MKStalin
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டோம் என்று பா.ம.க.வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #PMK #PMKManifesto
சென்னை:
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை சென்னையில் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்றோருக்கான உதவித் தொகை ஆகிய திட்டங்களின்படி வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.
* உழவர்கள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது.
* அனைத்து ஆறுகளையும் தேசிய மயமாக்குவதற்காக பாடுபடும்.
* அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
*மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்கு பாடுபடும்.
* மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவ மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.
* மத்திய அரசின் வரி வருவாயில் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு 44 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும்.
* மத்தியில் புதிய அரசு பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் லோக்பால் அமைப்பு அமைக்கப்படும்.
* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படுவதற்கு பா.ம.க. பாடுபடும்.
* இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு அகற்றப்படும்.
* தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்புவது கட்டாயமாக்கப்படும்.
* தனி நபர்களின் வருமான வரி விலக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும்.
ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரி வசூலிக்கப்படும்.
* ஜி.எஸ்.டி. வரி இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக மாற்றப்படும்.
* மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தும், இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தனி மானியம் வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.
* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டும்.
* பட்டாசு ஆலைகள் சிக்கலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து நிலை தொழிற் சாலைகளிலும் 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படுவதை மத்திய - மாநில அரசுகளின் மூலம் உறுதி செய்யப்படும்.

* சென்னை -சேலம் இடையிலான எட்டு வழிச் சாலைக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பா.ம.க. அனுமதிக்காது.
* சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச் சாலையாக விரிவுபடுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்கப்படும்.
*உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதற்காக, இந்தி பிரசார சபாவுக்கு இணையாக தமிழ்பிரசார சபா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
*ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
*மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்கவும், கச்சத்தீவை மீட்கப் பாடுபடுவோம்.
*இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் இளைஞரணி தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, மு.ஜெயராமன், ராதாகிருஷ்ணன், அடையார் வடிவேல, இரா.சகாதேவன், ஈகை தயாளன், கன்னியப்பன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #LSPolls #PMK #PMKManifesto

* இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்த 5 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.

* சென்னை -சேலம் இடையிலான எட்டு வழிச் சாலைக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பா.ம.க. அனுமதிக்காது.
* சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச் சாலையாக விரிவுபடுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்கப்படும்.
*உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதற்காக, இந்தி பிரசார சபாவுக்கு இணையாக தமிழ்பிரசார சபா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
*ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
*மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்கவும், கச்சத்தீவை மீட்கப் பாடுபடுவோம்.
*இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் இளைஞரணி தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, மு.ஜெயராமன், ராதாகிருஷ்ணன், அடையார் வடிவேல, இரா.சகாதேவன், ஈகை தயாளன், கன்னியப்பன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #LSPolls #PMK #PMKManifesto
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. #NaamThamizharKatchi #KarumpuVivasayi
சென்னை:
நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட சீமான் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கிடைத்தது பற்றி கூறும்போது, மக்களுக்கு ஒளிதரும் மெழுகு வர்த்தியாக இருப்போம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
விவசாயம் சார்ந்த சின்னம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். #NaamThamizharKatchi #KarumpuVivasayi

இந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியினர் தங்களது கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை அச்சிட்டு வந்தனர். பாராளுமன்ற தேர்தலிலும் இந்த சின்னத்தையே ஒதுக்குமாறு கூறி இருந்தனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
விவசாயம் சார்ந்த சின்னம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். #NaamThamizharKatchi #KarumpuVivasayi
பாராளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். #ParliamentElection #MKStalin #DMKAlliance
சென்னை:

இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
திமுக போட்டியிடும் தொகுதிகள்:
சென்னை வடக்கு
சென்னை தெற்கு
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம் (தனி)
அரக்கோணம்
வேலூர்
தர்மபுரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
சேலம்
நீலகிரி (தனி)
பொள்ளாச்சி
திண்டுக்கல்
கடலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
திருநெல்வேலி
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
திருவள்ளூர் (தனி)
கிருஷ்ணகிரி
ஆரணி
கரூர்
திருச்சிராப்பள்ளி
சிவகங்கை
தேனி
விருதுநகர்
கன்னியாகுமரி
புதுச்சேரி
மதிமுக- ஈரோடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோயம்புத்தூர், மதுரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- திருப்பூர், நாகப்பட்டினம் (தனி)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- ராமநாதபுரம்
விடுதலை சிறுத்தைகள்- விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்
இந்திய ஜனநாயக கட்சி - பெரம்பலூர். #ParliamentElection #MKStalin #DMKAlliance
தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
திமுக போட்டியிடும் தொகுதிகள்:
சென்னை வடக்கு
சென்னை தெற்கு
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம் (தனி)
அரக்கோணம்
வேலூர்
தர்மபுரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
சேலம்
நீலகிரி (தனி)
பொள்ளாச்சி
திண்டுக்கல்
கடலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
திருநெல்வேலி
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
திருவள்ளூர் (தனி)
கிருஷ்ணகிரி
ஆரணி
கரூர்
திருச்சிராப்பள்ளி
சிவகங்கை
தேனி
விருதுநகர்
கன்னியாகுமரி
புதுச்சேரி
மதிமுக- ஈரோடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோயம்புத்தூர், மதுரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- திருப்பூர், நாகப்பட்டினம் (தனி)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- ராமநாதபுரம்
விடுதலை சிறுத்தைகள்- விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்
இந்திய ஜனநாயக கட்சி - பெரம்பலூர். #ParliamentElection #MKStalin #DMKAlliance
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran
புதுடெல்லி:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.
இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் அந்த சின்னத்தை முடக்கியது.
பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran

இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலை பிறகு நடத்துவதில் என்ன பிரச்சனை? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #DMK #SC #TNBypoll
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

அதன்படி இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்லை பிறகு நடத்துவதில் என்ன பிரச்சனை? என்றும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும் படி எங்களை நிர்பந்திக்காதீர்கள் என்றும் தெரிவித்தனர்.
மேலும் இவ்வழக்கில் மார்ச் 25-க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DMK #TNBypoll
பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.
இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த திமுக, செவ்வாய்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி கூறப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரிப்பதாக கூறியது.