search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "erode constituency"

    • இறுதி நிலவரப்படி ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குப்பதிவானது.
    • ஆண் வாக்காளர்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 பேரும், பெண் வாக்காளர்களில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பேரும், திருநங்கைகள் 87 பேரும் வாக்களித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 927 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 93 ஆயிரத்து 667 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 184 பேர் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,688 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் நீண்ட வரிசையில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    காலை 11 மணிக்கு பின்னர் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சுணக்கம் ஏற்பட்டது. இறுதி நிலவரப்படி ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குப்பதிவானது.

    இது கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை விட 2.52 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 73.11 சதவீதம் வாக்கு பதிவானது. 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்களில் இந்த தேர்தலில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

    4 லட்சத்து 52 ஆயிரத்து 491 பேர் வாக்களிக்கவில்லை. ஆண் வாக்காளர்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 பேரும், பெண் வாக்காளர்களில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பேரும், திருநங்கைகள் 87 பேரும் வாக்களித்துள்ளனர்.

    • வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை.
    • விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வகையிலான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடிகள் உட்பட மொத்தம் 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் 191 வாக்குச்சாவடிகள் சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் பாதிக்கப்பட கூடிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 1476 வாக்குச்சாவடிகளும், ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1,112 வாக்குச்சாவடிகளும் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுவதுடன் நுன்பார்வையாளர்கள் மூலமாகவும் நேரடியாக கண்காணிக்கப்படும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லவும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து செல்லவும், சிறப்பு நிர்வாக நடுவர் அதிகாரம் பெற்ற மண்டல மற்றும் காவல்துறை அலுவலர்களை கொண்ட 198 குழுக்கள் ஈரோடு மாவட்டம் முழுமைக்கும், 146 குழுக்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு எனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 131-ன் படி காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்திய 72 மணி நேரத்தில் (3 நாட்களுக்கு முன்னர்) பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினரின் சோதனை தீவரப்படுத்தப்படும்.


    அதேப்போல் 48 மணி நேரத்துக்குள் மேலும் சோதனை தீவிர படுத்தப்படும். ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது. கூட்டம் கூட கூடாது.

    மாவட்ட அளவில் இலவச தொலைபேசி எண், சி-விஜில் ஆப் மூலமாக 118 புகார்கள் பெறப்பட்டு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை. 100 மீட்டருக்குள் வாகனங்களை நிறுத்துதல், பிற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கர்ப்பிணி, கை குழந்தையுடன் வருவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வாக்களித்திட அனுமதிக்கப்படுவார்கள்.

    மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோரில் 3001 பேரில் தபால் வாக்கு செலுத்த படிவம் 12 டி வழங்கப்பட்டது. அதில் 2,800 பேருக்கும் அதிகமானோர் வாக்கு பதிவு செய்துள்ளனர். முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழற்குடை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் இப்படி அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள மையத்தில் வழி காட்டுவதற்கு ஒருவர் செயல்படுவார்.

    தேர்தல் பணியில் 10 ஆயிரத்து 970 அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தவிர ஒருங்கிணைப்பு பணியில் சுமார் 2500 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் பணியாற்றுகின்றனர். வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். வாக்குப்பதிவுக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும். அது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

    வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு முகவர்கள் முன்னிலையில் நடைபெறும். முகவர்கள் வர தாமதமானால் 15 நிமிடம் காத்திருந்து மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும்.

    அப்போதும் முகவர்கள் வரவில்லை எனில் வாக்குச்சாவடி தலைமை அலுவலரே மாதிரி வாக்குப்பதிவை நடத்துவார். 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்படும். முகவர்கள் இருந்தால் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கு என மாதிரி வாக்கு பதிவு செய்யலாம். மலைப்பகுதி வாக்கு சாவடியில் அங்கு பணியாற்றுபவர்களே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தொலைபேசி இன்டர்நெட் வசதி தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் கிடைக்காத வாக்கு சாவடிகளுக்கு வனத்துறையினர் மைக் மூலமாக தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மலைப்பகுதியில் மட்டும் 120 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கத்திரி மலை, மல்லியம்மன் துர்க்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்ல மண் சாலைகளை உள்ளன இருப்பினும் கூடுதல் வசதி அலுவலர்களுடன் அங்கு வாக்குப்பதிவு நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உடன் இருந்தார்.

    • தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது.
    • அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார்‌.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் வந்து கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி ஆறுதல் கூறினர்.

    பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருப்பது புதிதாக (டெஸ்ட்) சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது.

    இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்த போது எட்டி பார்க்காத பிரதமர் எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

    நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெங்கு மணிமாறனும், தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அ.ம.மு.க. சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார்.

    ஈரோடு தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் இருந்தார்.

    இதில் ம.தி.மு.க. வேட்பாளர் 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.

    கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 28845

    வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 17233

    செந்தில்குமார் (அ.ம.மு.க) - 1402

    சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 2374

    கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 56339

    வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 33439

    செந்தில்குமார் (அ.ம.மு.க) - 2563

    சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 5193

    கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 84065

    வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 52204

    செந்தில்குமார் (அ.ம.மு.க) - 4062

    சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 8113

    கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 112385

    வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 71128

    செந்தில்குமார் (அ.ம.மு.க) - 5419

    சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 10623

    4-வது சுற்று முடிவில் கணேசமூர்த்தி அ.தி.மு.க வேட்பாளரை விட 41.257 ஓட்டுகள் அதிகம் பெற்று இருந்தார்.
    பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். #ParliamentElection #ErodeConstituency #GaneshaMoorthy
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதுதவிர ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது.



    இந்நிலையில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.

    தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கழகத்தின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    கணேசமூர்த்தி 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். #ParliamentElection #ErodeConstituency #GaneshaMoorthy

    ×