search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN By poll"

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்.21ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #EPS #OPS
    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம்.

    விண்ணப்பப் படிவங்களை ரூ.25,000-ஐ செலுத்தி பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #ADMK #EPS #OPS
    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. #TNBypolls #DMK
    சென்னை:

    அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த 4 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பொறுப்பாளர்களாக- துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்.

    திருப்பரங்குன்றம் கிழக்கு- மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.,

    மேற்கு- தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம்.

    தெற்கு- விருதுநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,

    வடக்கு- மதுரை மாநகர மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி.

    தெற்கு பகுதி-சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ.

    அவனியாபுரம் கிழக்கு பகுதி- சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்ஏ.

    அவனியாபுரம் மேற்கு பகுதி- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ.

    மேலும் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகர், ஜெ.அன்பழகன், கே.எஸ்.மஸ்தான், ஆண்டி அம்பலம், இன்பசேகரன், ஈஸ்வரன், வசந்தம் கார்த்திகேயன், கோவி.செழியன் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன், முத்துராமலிங்கம், ஆவடி சா.மு.நாசர், நிவேதா முருகன்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள்- திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன்.


    தூத்துக்குடி ஒன்றியம்- கனிமொழி எம்.பி., கருங்குளம் வடக்கு- ஆஸ்டின் எம்.எல்.ஏ., திருவைகுண்டம் மேற்கு- கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் மேற்கு- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முத்தையாபுரம் பகுதி- சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., போல்பேட்டை பகுதி- சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.

    மேலும் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, கணேசன், மனோ.தங்கராஜ், எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், மு.பெ.கிரி, இ.கருணாநிதி, கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அப்துல் வகாப், பத்மநாபன்.

    அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள்- விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.

    க.பரமத்தி ஒன்றியம்- முத்துசாமி, கரூர் ஒன்றியம்- டி.எம்.செல்வகணபதி, அரவக்குறிச்சி ஒன்றியம்- சக்கரபாணி எம்.எல்.ஏ.

    மேலும் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காந்தி, பெரியண்ணன், சுந்தர், மாதவரம் சுதர்சனம், எழிலரசன், ராமர், சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் காந்திசெல்வன், மூர்த்தி, அங்கயற்கண்ணி, பி.தியாகராஜன், சிவசங்கர்.

    சூலூர் தொகுதி பொறுப்பாளர்கள் - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்.

    சுல்தான்பேட்டை ஒன்றியம்- தா.மோ.அன்பர சன் எம்.எல்.ஏ., சூலூர் தெற்கு ஒன்றியம்- ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சூலூர் வடக்கு ஒன்றியம்- ஆ.ராசா.

    மேலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், கார்த்திக், தடங்கம் சுப்பிரமணி, செங்குட்டுவன், பிரகாஷ், ஜெயராமகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, கார்த்திகேயன், நல்லதம்பி, முபாரக், ராமச்சந்திரன், செல்வராஜ், நல்லசிவம் மற்றும் சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, பத்மநாபன், செல்ல பாண்டியன், சிவானந்தம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNBypolls #DMK
    தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில் தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடைபெறுவதாகவும், காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். கோவையில் 11.20 சதவீதம், ஈரோட்டில் 1.32 சதவீதம், கரூரில் 10.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறினார். #TNElections2019 #VoterTurnout
    22 தொகுதி இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க. அரசை கவிழ்க்கும் வாய்ப்பு தி.மு.க.வுக்கு கிடைக்கும் என்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #TNBypoll #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி விவரம்:-

    கேள்வி:- உங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது.

    பதில்:- மோடி மற்றும் அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை காண முடிந்தது. மக்கள் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டளிக்க தயாராகி விட்டனர். தமிழகம் புதுவை உள்பட அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

    கே:- ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் பாரதிய ஜனதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா?

    ப:- இந்த தேர்தலில் பிராந்திய கட்சிகள் முக்கிய சக்தியாக இருக்கும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் நாட்டின் அனைத்து மாநில மக்களிடமும் உள்ளது. ஏன் என்றால் மத்திய அரசால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வோம். மத சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம்.

    கே:- பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தெலுங்கானா, ராஷ்டீரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற 3-வது அணி கட்சிகள் தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தி.மு.க.வின் நிலைபாடு எப்படி இருக்கும்?

    ப:- பாசிச பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்திவிட்டு ராகுல் காந்தி தலைமையில் அரசு அமைப்பது என்பதே எங்களது ஒரே குறிக்கோள். தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இதர கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.

    கே:- 22 தொகுதி இடைத்தேர்தலும் நடப்பதால் மாநில அரசை கவிழ்க்க முடியும் என்று கருதுகிறீர்களா?



    ப:- ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில் இந்த ஆட்சியை இன்னுமா விட்டு வைத்து இருக்கிறீர்கள்? என்று எங்களிடம் மக்கள் கேட்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நாங்கள் ஜனநாயக ரீதியில் தான் செயல்படுவோம். 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு இந்த அரசை கவிழ்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும். மக்களின் விருப்பத்தை நாங்கள் ஜனநாயக ரீதியாக நிறைவேற்றுவோம்.

    கே:- கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து உங்களுக்கு தேவையான மெஜாரிட்டி கிடைத்தால் நீங்கள் ஆட்சி அமைப்பீர்களா? அல்லது சட்டசபையை கலைக்க சொல்வீர்களா?

    ப:- கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி முடிவு எடுப்போம். மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.

    கே:- அ.தி.மு.க. அரசு கவிழும் என்று நீங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது கூறினீர்கள். எதை வைத்து நீங்கள் இப்படி சொன்னீர்கள்?

    ப:- எடப்பாடி அரசு மைனாரிட்டியாக உள்ளது. அனைத்து அரசியல் சாசன விதிகளும் மீறப்பட்டு மத்திய அரசின் உதவியால் இந்த அரசு நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மத்தியில் இந்த தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    கே:- பிரசாரத்தின் போது உங்கள் தந்தை இல்லாத நிலையை எப்படி உணர்ந்தீர்கள்?

    ப:- அவர் இல்லாதது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவரை தந்தையாக பார்த்ததை விட தலைவராகத் தான் அதிகமாக பார்த்தேன். அவர் ‘‘உடன்பிறப்பே’’என்று 60 ஆண்டுகளாக அழைத்த அந்த காந்தகுரல் இல்லாதது மக்களையும், தொண்டர்களையும் வேதனை அடைய செய்யும் ஒன்றாக இருந்தது. அவருடைய நுட்பங்களையும், வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். நான் அனைத்து அரசியல் பாடங்களையும் அவரிடம் இருந்து கற்று இருக்கிறேன். அவருடைய காலடி தடத்தை தொடர்கிறோம். அவர் இப்போது இருந்திருந்தால் என்னை வழிநடத்தி இருப்பார்.

    கே:- தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பலவகை கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருக்கிறீர்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது என்று வைத்து கொள்வோம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை இன்றைய நிதி நிலையில் நிறைவேற்ற முடியுமா?

    ப:- நிச்சயமாக நிறைவேற்ற முடியும். 2006-ல் தி.மு.க. அரசு ஏற்பட்ட போது அன்றைய அ.தி.மு.க. அரசு கருவூலத்தை முற்றிலும் காலியாக்கி விட்டு சென்றிருந்தது. ஆனாலும் தலைவர் கருணாநிதி பதவி ஏற்றதும் ரூ. 7,000 கோடி விவசாய கடனை ரத்து செய்து முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.

    இதனால் மாநில நிதி நிலைமை மோசமாகும் என்று விமர்சித்தனர். ஆனால் தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் வளத்தை பெருக்கினார். மத்திய அரசும் உதவி செய்ததால் பற்றாக்குறை மிகவும் குறைக்கப்பட்டது.

    கடந்த 5 ஆண்டு மத்திய ஆட்சியில் அதானி, அம்பானி, அமித்ஷா மகன் போன்ற சில தொழில் அதிபர்களுக்கு தான் மத்திய அரசு உதவி இருக்கின்றது. மத்திய அரசின் தவறான கொள்கைகள் பண மதிப்பிழப்பு திட்டம் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நிதி நிலைமைகளை சமாளிக்க நாங்கள் சிறந்த கொள்கைகளை வைத்து உள்ளோம். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

    கே:- தினகரன் மற்றும் அவரது கட்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

    ப:- ஜனநாயகத்தில் சில கட்சிகள் உதயமாகும் சில கட்சிகள் காணாமல் போகும். இந்த கட்சியை பொறுத்தவரை பங்காளி சண்டையாகவே பார்க்கிறேன். இந்த சண்டையில் யார் சக்தி படைத்தவர்? யார் வீழ்ச்சி அடைவார் என்பது மே 23-ந் தேதி தெரியவரும்.

    கே:- உங்கள் மகன் உதயநிதி இந்த தேர்தலில் நட்சத்திர பிரசாரமாக திகழ்ந்தாரே? அவருக்கு கட்சியில் ஏதேனும் முக்கிய பதவி வழங்குவீர்களா?

    ப:- அவர் மீது ஊடகங்கள் அன்பு காட்டி காட்சி படுத்தியதற்கு நன்றி.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #TNBypoll #DMK #MKStalin
    2 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #LokSabhaElections2019
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 39 பாராளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    அவரது கட்சியின் பலத்தை தெரிந்துகொள்ள மற்ற அரசியல் கட்சிகளும் ஆர்வமாக இருந்தனர். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான கடந்த மார்ச் 26-ந்தேதி பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. திடீர் என்று வேட்பாளர் மாற்றப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் களம் காண முடியாமல் போனது.

    வேட்பு மனு பரிசீலனையின்போது காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் வேட்புமனு உரிய ஆவணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் மனு முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. அரூர் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குப்புச்சாமியின் மனு நிராகரிக்கப்பட்டது.

    2 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தலுக்காக இதுவரை செய்த பணிகள் அத்தனையும் வீணாகியதால் அந்த பகுதிகளின் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்திலும் உள்ளனர். #MakkalNeedhiMaiam #LokSabhaElections2019
    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலை பிறகு நடத்துவதில் என்ன பிரச்சனை? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #DMK #SC #TNBypoll
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

    இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த திமுக, செவ்வாய்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி கூறப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரிப்பதாக கூறியது.


    அதன்படி இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்லை பிறகு நடத்துவதில் என்ன பிரச்சனை? என்றும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும் படி எங்களை நிர்பந்திக்காதீர்கள் என்றும் தெரிவித்தனர்.

    மேலும் இவ்வழக்கில் மார்ச் 25-க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  #DMK #TNBypoll 
    ×