என் மலர்
தேர்தல் செய்திகள்
வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls
மதுராந்தகம்:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பணத்தை ரொக்கமாக கொண்டு செல்ல தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் ரூ.3 கோடியே 20 லட்சம் ரொக்கம் இருந்தது. இந்த பணம் கொண்டு செல்வதற்காக உரிய ஆவணங்கள் அதில் இருந்த ஊழியர்களிடம் இல்லை.
இதையடுத்து ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை செய்யூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி ஏ.டி.எம். பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஏ.டி.எம்.க்கு பணம் நிரப்பும் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். #LSPolls

தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் ராகுல்காந்தி ஒப்புதலுடன் நாளை வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls #congress #RahulGandhi
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 9 பாராளுமன்ற தொகுதியும், புதுச்சேரியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் போட்டியிட இருக்கும் திருவள்ளூர், ஆரணி, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கரூர், விருதுநகர், திருச்சி, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. போட்டியிட விரும்புவோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரிசீலனை செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் மத்திய தேர்வு குழு தயாரித்துள்ளது. இந்த பட்டியல் ராகுல்காந்தி ஒப்புதலுடன் நாளை வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெயரும் இடம் பெறும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகி தெரிவித்தார். #LSPolls #congress #RahulGandhi
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 9 பாராளுமன்ற தொகுதியும், புதுச்சேரியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் போட்டியிட இருக்கும் திருவள்ளூர், ஆரணி, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கரூர், விருதுநகர், திருச்சி, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்வு குழுவினர் அனுப்பி உள்ள வேட்பாளர்கள் பட்டியல் கட்சி மேலிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் மத்திய தேர்வு குழு தயாரித்துள்ளது. இந்த பட்டியல் ராகுல்காந்தி ஒப்புதலுடன் நாளை வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெயரும் இடம் பெறும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகி தெரிவித்தார். #LSPolls #congress #RahulGandhi
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 பேரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். #LSPolls #MNM
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். வேட்பாளர்களின் முதல் பட்டியலை நேற்று வெளியிட்டார்.
மத்திய சென்னையில், கமீலா நாசர், வடசென்னையில் முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். முதல் வேட்பாளர் பட்டியலில் 3 மருத்துவர்கள், 5 வக்கீல்கள், முன்னாள் ஐஜி, முன்னாள் நீதிபதி ஆகியோரும் 8 தொழில் அதிபர்களும் வேட்பாளர்களாகி உள்ளனர்.
21 பேரில், 15க்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கும் கீழானவர்கள். அனைவருமே பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இதில் 3 பேர் எம்.பில். பட்டதாரிகள்.
2-வது கட்ட பட்டியல் விரைவில் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென்சென்னையிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
‘கரைவேட்டி இல்லாத, கட்சிக்கொடி பறக்காத வித்தியாசமான வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியுள்ளார். இது இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். ஒரு பூத்துக்கு 9 பேர் வீதம், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 4500 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 24-ந்தேதி வெளியிடப் போகும் தேர்தல் வாக்குறுதிகளோடு, தொகுதியின் முக்கியமான பிரச்சினைகளையும் மையமாக வைத்து பிரசாரம் செய்யுமாறு கட்சியினருக்கு கமல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாத கடைசியில் இருந்து பிரசார சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.
ரசிகர் மன்றத்தை சார்ந்த ஒருவர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. அடுத்த வேட்பாளர் பட்டியலில் சிநேகன் பெயரும் இடம்பெற உள்ளது.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் கமல் கூறியதாவது:-
எங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களின் ஆதார தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கவனம் செலுத்தியுள்ளோம். குடிநீர், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
என் சின்ன வயதில் இருந்தே ஈர்த்த வாக்குறுதிகளைதான் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் அளித்துள்ளன. அதை செயல்படுத்ததான் அவர்களால் முடியவில்லை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் களமிறங்கி உள்ளோம்.
நமது தமிழ் நாட்டை ஆங்கிலத்தில், ‘லேன்ட் ஆப் ரைசிங் சன்’ என்பார்கள். அந்த சன், சூரியனல்ல, வாரிசுகள் என்பது இப்போதுதான் புரிகிறது
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை 2 கட்டமாக பார்க்க வேண்டும். சட்டம், கருணை. இப்போது கருணை தேவை என்று நினைக்கிறேன். தேர்தலில் போட்டியிட பயப்படவில்லை.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LSPolls #MNM

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 25-ந்தேதி கன்னியாகுமரி தொகுதியில் பிரேமலதா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்ய உள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் அவரது பிரசார திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 25-ந்தேதி கன்னியாகுமரி தொகுதியில் பிரேமலதா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறார்.
மேலும் தே.மு.தி.க. போட்டியிடும் 4 தொகுதிகளில் அவர் 2 நாட்கள் முகாமிட்டு பிரசாரம் செய்கிறார். சட்டசபை தொகுதி வாரியாக அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இறுதியில் தனது சகோதரர் சுதீஷ் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். முன்பைபோல அவர் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது என்பதால் ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
விஜயகாந்த் பிரசாரத்துக்கு மட்டுமே வருவார். ஆனால் பேச மாட்டார் என்று ஏற்கனவே எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். எனவே விஜயகாந்துக்கு பதிலாக அவரது மனைவி பிரேமலதா தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், இதுவரை 13.90 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #LSPolls #FlyingSquads
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படையால் இதுவரை 13.90 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உரிமம் பெற்றுள்ள 21999 துப்பாக்கிகளில் 18 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 32 துப்பாக்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #FlyingSquads

மக்களவைத் தேர்தலுக்காக இதுவரை 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலுக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு மட்டும் தலா 3 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படையால் இதுவரை 13.90 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உரிமம் பெற்றுள்ள 21999 துப்பாக்கிகளில் 18 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 32 துப்பாக்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #FlyingSquads
ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார் என்று வைகோ தெரிவித்துள்ளார். #LSPolls #MDMK #Vaiko
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கணேச மூர்த்தி போட்டியிடுகிறார். ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #LSPolls #MDMK #Vaiko
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கணேச மூர்த்தி போட்டியிடுகிறார். ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #LSPolls #MDMK #Vaiko
சேலம் மாவட்டத்தில் நாளை ஒரே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர். #LSPolls
சேலம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியை அடுத்த கருமந்துறையில் உள்ள விநாயகர் கோவிலில் காலை 9 மணிக்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனது தேர்தல் பிரசாரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.
இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே. சுதீசை ஆதரித்து ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தொடர்ந்து அவர் வாழப்பாடியிலும், அயோத்தியாப்பட்டணத்திலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் அவர் பிற்பகல் 3.15 மணிக்கு தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
மாலை 4 மணியளவில் தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் வாக்கு சேகரிக்கிறார். 5 மணிக்கு நல்லம்பள்ளியிலும், 5.30 மணிக்கு தர்மபுரி டவுனிலும், 6.30 மணிக்கு பென்னாகரத்திலும், 7.30 மணிக்கு பாப்பிரெட்டிபட்டியிலும், 8.30 மணிக்கு பாலக்கோட்டிலும், 9.15 மணிக்கு காரிமங்கலத்திலும் வாக்குசேகரிக்கிறார். இரவில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார்.
23-ந் தேதி காலை 9 மணிக்கு வேலூர் மாவட்டம் சேலம் கூட்ரோடு, திருப்பத்தூர், ஆசிரியர் நகர், 10.30 மணிக்கு ஜோலார்பேட்டை, 11.30 மணிக்கு வாணியம்பாடி டவுன், 1.40 மணி முதல் 1 மணி வரை ஆம்பூர் டவுன் உள்பட 4 இடங்கள், மாலை 4 மணிக்கு ஆம்பூர் பைபாஸ், 5 மணிக்கு உமாரபாத், 6மணி பேரணாம்பட்டு, 7 மணி குடியாத்தம் பஜார், 7.30 மணி கே.வி.குப்பம், 8 மணி லத்தேரி, 8.30 மணி சித்தூர் பேருந்து நிலையம், 9 மணி வேலூர் புதுமாநகராட்சி, 9.30 மணி மண்டித்தெரு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். இரவில் வேலூரில் தங்குகிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
பிற்பகல் 2 மணியளவில் தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்லும் மு.க. ஸ்டாலின் தர்மபுரி மற்றும் அரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
சேலம் மாவட்டத்தில் நாளை ஒரே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதால் அந்த இரு கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #LSPolls #ADMK #EdappadiPalaniswami #DMK #MKStalin

இதே போல சேலம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
பிற்பகல் 2 மணியளவில் தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்லும் மு.க. ஸ்டாலின் தர்மபுரி மற்றும் அரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
சேலம் மாவட்டத்தில் நாளை ஒரே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதால் அந்த இரு கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #LSPolls #ADMK #EdappadiPalaniswami #DMK #MKStalin
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை மற்றும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #AMMK
திருச்சி:
அம்மா மக்கள் முன்னேற் கழகத்தின் திருச்சி பாராளு மன்ற தொகுதியின் தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திருச்சி கலெக்டர் அலுவலக சாலை புதுக்கோட்டை அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
யார் எந்த தடையினை ஏற்படுத்தினாலும் அ.ம.மு.க. தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முடியாது. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம், மத்திய அரசின் அச்சுறுத்தல் ஆகியவற்றினை மீறி தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எதிரிகளையும், துரோகிகளையும் எதிர் கொண்டு வெற்றி பெற்றோம். அ.ம.மு.க. மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தால் தேர்தலை திட்டமிட்டு தள்ளிவைத்தனர். ஆனால் லோக்சபா தேர்தலை தள்ளி வைக்க முடியாது. இதனால் இந்த தேர்தல் வருகிறது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழக மக்கள் யார் பக்கம் என்பதை மே 23-ல் அனைவருக்கும் தெளிவாக தெரியப்படுத்துவார்கள்.
அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கை மற்றும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் 22-ந்தேதி வெளியிடப்படும். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர்கள் வருகிற 26-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். 27-ந்தேதி முதல் 20 நாட்கள் தொடர் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
அ.தி.மு.க.விற்கு 45 சதவிதம் 50 சதவிதம் மக்கள் ஆதரவு இருக்கிறது என கூறுவதற்கெல்லாம் மே 23-ல் முடிவு வரும். அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் தான். 95 சதவிதம் அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்.
மேலும் அ.தி.மு.க.வில் உள்ள ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களும் விரைவில் எங்களுடன் சேருவார்கள். மக்களை வசப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் தான் கவர்ச்சியான வாக்குறுதி யுத்திகளை கையாள வேண்டும். தேர்தலில் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. மற்ற கட்சிகள் எல்லாம் 2-ம் இடத்திற்குதான் போட்டியிட வேண்டும்.
கருத்து திணிப்புகளை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். அ.ம.மு.க.விற்கு சின்னம் வழங்கும் விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளது என கூறவில்லை. நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளோம். வருகின்ற 25-ந்தேதி அ.ம.மு.க.விற்கு சின்னம் ஒதுக்கும் விஷயத்தில் நீதிமன்றமும் நல்ல முடிவை தராவிட்டால் மக்கள் மன்றத்தை சந்திக்க உள்ளோம்.
ஒவ்வொரு தொகுதிகளிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தனித்தனி சின்னத்தில் நின்றாலும், மக்கள் அ.ம.மு.க. வேட்பாளர்களின் சின்னத்தினை தேடிப்பிடித்து வாக்களித்து வெற்றியைத் தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #AMMK

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தின் போது கனிமொழிக்கு வாக்கு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK #Kanimozhi
விளாத்திகுளம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. அதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தங்களது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் நேற்று விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு திரண்டு நின்ற கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து கூட்டத்தில் நின்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழிசை பெயரை சொல்லுமாறு கூறினர். இதை கேட்ட வேட்பாளர் சின்னப்பன் பின்பு சுதாரித்துக்கொண்டு தமிழிசைக்கு வாக்களியுங்கள் என கூறினார். இதன் காரணமாக பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு உண்டானது. #ADMK #Kanimozhi
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. அதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தங்களது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் நேற்று விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அவர்கள் மத்தியில் சின்னப்பன் பேசும் போது, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசைக்கு வாக்களியுங்கள் என கூறுவதற்கு பதிலாக கனிமொழிக்கு ஓட்டு போடுங்கள் என பேசினார்.

தென்சென்னை தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். #LSPolls #UdhayanidhiStalin #ThamizhachiThangapandian
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இந்தநிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை தொகுதி தேர்தல் அலுவலகத்தை, சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தென்சென்னை பாராளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனும், எங்கள் குடும்பத்தினருடனும் 3 தலைமுறையாக கொண்டுள்ள நட்பு தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தேர்தலில் வெற்றியை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன். தி.மு.க. மீது கொள்கை பிடிப்பு கொண்ட ஒரு அழகான வேட்பாளரை உங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப தவறிவிடாதீர்கள். விரைவில் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்தை ஆதரிப்பீர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இதில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோன்று, 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்ற நம்பிக்கை தி.மு.க.வினருக்கு மட்டும் அல்ல பொதுமக்களிடமும் அந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தி.மு.க. வெற்றியின் கதாநாயகனாக தேர்தல் அறிக்கையும், தலைவர் மு.க.ஸ்டாலினும் இருப்பார்கள். வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக தி.மு.க. வேட்பாளர் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அவர்களின் கடின உழைப்பு, கட்சி போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை மனதில் கொண்டு தான் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். பா.ஜனதா தலைவர்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்ற அடைமொழியை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது அதற்கு தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.
தென்சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அடையாறில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அவருக்கு மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #LSPolls #UdhayanidhiStalin #ThamizhachiThangapandian

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவின பட்டியலில் மட்டன் பிரியாணியின் விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. #EC #LSPolls
புதுடெல்லி:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதில் களம் காண வாய்ப்பு கிடைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
தேர்தலில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற முடிவோடு களத்தில் இறங்கி இருக்கும் அவர்கள், வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இதற்காக சிலப் பல கோடிகளை வாரியிறைக்கவும் சிலர் தயங்குவது இல்லை.
ஆனால் அப்படிப்பட்ட வேட்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தேர்தல் கமிஷன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது வேட்பாளர் தங்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அதிகப்பட்ச விலை விவரங்களை தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான பட்டியல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, வேட்பாளர்கள் பயன்படுத்தும் 2 படுக்கை வசதி கொண்ட அறையின் வாடகை 5 நட்சத்திர விடுதி என்றால் ரூ.9300 மற்றும் வரிகளும் அடங்கியதாக இருக்க வேண்டும். 3 நட்சத்திர விடுதி என்றால் ரூ.5,800 மற்றும் வரிகள் அடங்கி இருக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
இதைப்போல மட்டன், சிக்கன், காய்கறி பிரியாணிகளின் விலை முறையே ரூ.200, ரூ.180, ரூ.100 ஆக இருக்க வேண்டும் எனக்கூறி உள்ள தேர்தல் கமிஷன், மற்ற உணவு வகைகளான சாப்பாடு ரூ.100, சிற்றுண்டி ரூ.100, தேநீர் ரூ.10, பால் ரூ.15, காய்கறி சாதம் ரூ.50, இளநீர் ரூ.40 என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும் அறிவித்து இருக்கிறது.
மேலும் பூசணிக்காய் ரூ.120, சேலை (பூனம்) மற்றும் டீ-சர்ட் முறையே ரூ.200 மற்றும் ரூ.175, வாழை மரம் ரூ.700, தொப்பி ரூ.50, பூக்கள் ரூ.60, சால்வை ரூ.150, தண்ணீர் ஒரு லிட்டர் ரூ.20, பிளச்சிங் பவுடர் கிலோ ரூ.90 போன்றவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வேட்பாளர்களுடன் செல்லும் தொழிலாளர்களின் ஊதியத்தை பொறுத்தவரை 8 மணி நேரத்துக்கு ரூ.450-ம், டிரைவர்களுக்கு ரூ.695-ம் வழங்கப்பட வேண்டும். பட்டாசுகளுக்கு ரூ.600 (ஆயிரம் வாலா), பேண்ட் மேளத்துக்கு ரூ.4500 (4 மணி நேரத்துக்கு) என நிர்ணயித்துள்ள தேர்தல் கமிஷன், திருமண மண்டபங்களுக்கு வாடகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அறிவித்து இருக்கிறது.
வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரசார கூட்டங்களில் பயன்படுத்தும் எல்.இ.டி. திரைகளின் வாடகை ரூ.12 ஆயிரமாகவும் (8 மணி நேரம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர்களின் இத்தகைய தேர்தல் செலவினங்களை கண்காணிக்க தொகுதிக்கு 2 அதிகாரிகளை நியமித்து இருக்கும் தேர்தல் கமிஷன், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சார்பில் நடைபெறும் பிரசாரங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்யவும் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. #EC #LSPolls

தேர்தல் காரணமாக வருமானவரித்துறை மூலம் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் நடக்கும் பணப் பரிமாற்றமும் கண்காணிக்கப்படுகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LSPolls #SatyabrataSahoo #IncomeTax
சென்னை:
தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும்போது வாகனத்தில் கட்சி கொடியை பொருத்துவதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். கூட்டணி கட்சியின் கொடிகளையும் அனுமதி பெற்று வாகனங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக வாகனங்களில் கொடிகள் உள்ளிட்ட இதர உபகரணங்களை பொருத்தும்போது மோட்டார் வாகன சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்.
சென்னையில் அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்கி கணக்கு மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

வங்கிக் கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரும் வரவுகள் பற்றி வருமானவரித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். ஆயிரக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்படும் வங்கிக் கணக்குகளில் திடீரென்று ஒரு லட்சத்துக்கும் மேல் பணம் புரளத்தொடங்கினால் அதுவும் வருமான வரித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இந்த காலகட்டத்தில் பணப் பரிமாற்றத்தில் வித்தியாசங்கள் காணப்படும் வங்கிக் கணக்குகள், சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட்டு கண் காணிக்கப்படும்.
திடீரென்று நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் வங்கிக்கணக்கில் திடீர் பண வரவு குறித்து கண்காணித்து அது குறித்த தகவல்களை வருமான வரித்துறை தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் பணப்பரிமாற்றங்களும் வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ளன.
தமிழகத்தில் இதுவரை தேர்தல் நடவடிக்கையில் ரூ.12 கோடியே 80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 19-ந் தேதியன்று மட்டும் ரூ.3 கோடியே 76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள 94 கிலோ கட்டித் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மதுரையைச் சேர்ந்த கிருபாகரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 1.8 கிலோ வெள்ளி, மதுபான பாட்டில்கள் மற்றும் சிறிய பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றோடு கைத்துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 3,166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு சொத்துக்களில் செய்யப்பட்டிருந்த 1.61 லட்சம் சுவர் விளம்பரங்களும், தனியார் சொத்துகளில் செய்யப்பட்டிருந்த 1.28 லட்சம் சுவர் விளம்பரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர் இடம்பெறும் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு செய்து தரப்படும் குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள், அந்தந்த வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளர் இல்லாத கூட்டம் என்றால், அரசியல் கட்சியின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
வரும் 24-ந் தேதியன்று 3 லட்சத்து 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தேர்தல் ஆணையத்தில் இருந்து வரவில்லை. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மையங்களில் உள்ள மற்ற அறைகளில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
சி விஜில் செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். இதில் பதிவாகும் புகார் பற்றிய விவரங்கள் மின்னணு முறையில் பதிவாகி இருக்கும். எனவே, பழைய பதிவுகளை இதில் பதிவேற்றம் செய்தால் அது நிராகரிக்கப்பட்டு விடும்.
அந்த வகையில் இதுவரை 470 வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 154 புகார்கள் தேவையற்றவை என்று நீக்கப்பட்டுவிட்டன. 78 புகார்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. 119 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SatyabrataSahoo #IncomeTax

வங்கிகளில் இருந்து ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் எடுத்துச்செல்வதற்கு பல்வேறு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்தளித்துள்ளது. ஆனாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரியின் சான்றைப் பெற்றுச்செல்ல வேண்டும்.