search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு மைதானம் கேட்டு வாலிபர்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியல் ஈடுபட்ட வாலிபர்கள்.

    விளையாட்டு மைதானம் கேட்டு வாலிபர்கள் சாலை மறியல்

    • இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    • தின்னப்பட்டி செல்லும் சாலையில் தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் காவலர் பயிற்சி பெறவும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்திடவும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் ஊரை ஒட்டி இருப்பதால் பயிற்சி செய்ய சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதனால் விளையாட்டுத்திடல் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்து தர வேண்டும் என்று முதலமைச்சர் தனி பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓமலூர் ஒன்றிய அலுவலகம் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கி சுமார் ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் விளையாட்டு மைதானம் அமைத்து தருவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் இது சம்பந்தமாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஓமலூரில் இருந்து தின்னப்பட்டி செல்லும் சாலையில் தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×