search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல்  மருந்து விற்ற 2 பேருக்கு ரூ.1.80 லட்சம் அபராதம்
    X

    டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்ற 2 பேருக்கு ரூ.1.80 லட்சம் அபராதம்

    • சேலம் சரக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தலைவாசல் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
    • டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் சரக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த 2021-ம் ஆண்டு தலைவாசல் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செந்தில் குமார் மற்றும் வினோத் ஆகியோர் தங்களது மருந்து கடைகளில், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததும், பொதுமக்களுக்கு மருந்துகளுக்கான உரிய ரசீதுகள் வழங்காததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் மருந்துகள் தர கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி செந்தில்குமாருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், வினோத்துக்கு ரூ.60 ஆயிரமும் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு அருண்குமார் உத்தரவிட்டார்.

    Next Story
    ×