search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி கந்தபுரத்தில்  ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?
    X

    உடன்குடி கந்தபுரத்தில் ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?

    • மின் கம்பத்தில் அடிப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரை உள்ள அனைத்து சிமெண்டுகளும் உடைந்து விழுந்து விட்டது.
    • வேகமாக காற்றுவீசும் போதுஇந்த மின்கம்பம் அங்கும் இங்கும் அசைகிறது.

    உடன்குடி:

    உடன்குடிஅருகே உள்ள கந்தபுரம் மேலத் தெருவில்உடையார் சுவாமி கோவில் செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலைமையில் உள்ளது. அடிப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரை உள்ள அனைத்து சிமெண்டுகளும் உடைந்து விழுந்து விட்டது. மின் கம்பத்தில்உள்ளே உள்ள இரும்புகம்பிகள் எல்லாம் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

    வேகமாக காற்றுவீசும் போதுஇந்த மின்கம்பம் அங்கும் இங்கும் அசைகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×