என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிவகிரி அருகே மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்
  X

  முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்தபடம்.


  சிவகிரி அருகே மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முகாமில் 42 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  • முகாமிற்கு சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்.

  சிவகிரி:

  சிவகிரி அருகே கூடலூர் பிர்க்காவைச் சேர்ந்த துரைச்சாமியாபுரத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 42 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  முகாமிற்கு சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அய்யனார் வரவேற்றுப் பேசினார்.

  இந்நிகழ்ச்சியில் மண்டல துணைத் தாசில்தார் மைதீன் பாட்ஷா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், துரைச்சாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா வேல்முருகன், பஞ்சாயத்து எழுத்தர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், கணேசன், கிராம உதவியாளர்கள் மாரியம்மாள், சுப்பையா பாண்டியன் மற்றும் கண்ணன், மணிகண்டன், விக்கி, பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×