search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லையில் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன -162 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன
    X

    இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை விஜர்சனம், வண்ணார்பேட்டை பேராச்சி செல்வி அம்மன் கோவில் தாமிரபரணி நதிக்கரை நடைபெற்றபோது எடுத்தபடம்.

    ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லையில் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன -162 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன

    • கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வந்தது.
    • இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் முன்னீர்பள்ளம் பகுதியில் ஆற்றில் கரைக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி சுமார் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    சிலைகள் ஊர்வலம்

    இதில் இந்து முன்னணி சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதேபோல இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இந்து அமைப்புகள் சார்பாக பல்வேறு இடங்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்ப ட்டு வந்தது.

    போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம்

    நெல்லை வண்ணார் பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதியில் இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி படித்து றையில் கரைக்கப்பட்டது.

    இந்து முன்னணி சார்பில் வண்ணார் பேட்டை, குறுக்குத்துறை, சுத்தமல்லி உள்பட மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 70 விநாயகர் சிலைகள் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி படித்து றையில் கரைப்படுகிறது.

    இதேபோல மேலப்பாளையம் மண்டல பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் முன்னீர்பள்ளம் பகுதியில் ஆற்றில் கரைக்கப்படுகிறது.

    புறநகர் பகுதி

    இதுதவிர திசையன்விளை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் உவரி கடற்கரையிலும், களக்காடு பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நாங்குநேரி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உவரி கடலில் கரைக்கப்படுகிறது.

    சேரன்மகாதேவி, அம்பை, வீரவநல்லூர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

    சிலைகள் ஊர்வலத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களாக சிலைகள் கரைக்கப்பட்டு வந்தன.

    கடைசி நாளான இன்று சுரண்டை, ஆழ்வார்குறிச்சி, கடையம்,சேர்ந்தமரம், ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தம் 77 சிலைகள் இன்று சுமார் 6 இடங்களில் கரைக்கப்பட்டன. இதனையொட்டி மாவட்டத்தில் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்து க்குடி மாவ ட்டத்தில் இன்று 300 சிலைகள் கரை க்கப்பட்டன. முத்தை யாபுரம், கூட்டம்புளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செ ல்ல ப்பட்டது. மாநகர பகுதியில் தெர்மல் நகர், திரேஸ்புரம் உள்ளிட்ட இடங்களில் கரை க்கப்பட்டது. இதேபோல் மாவட்ட த்தில் வேம்பார், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்பட்டன.

    இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×