search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    53 அடிக்கு கீழ் சென்ற வைகை அணை நீர்மட்டம்
    X

    வைகை அணை (கோப்பு படம்)

    53 அடிக்கு கீழ் சென்ற வைகை அணை நீர்மட்டம்

    • 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், போதிய மழை இல்லாத காரணத்தாலும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியுள்ளது.
    • 53 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியதும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் மழைப்பொழிவு தீவிரமடையும். ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. கடந்தஆண்டு இதேகால கட்டத்தில் தேனி மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது.

    தற்போது மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும் அதற்கான அறிகுறி குறைவாகவே உள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் ஓரளவு மழை பெய்து வருகிறது.

    பெரியாறு, வைகை அணைகளில் இருந்து பாசனத்திற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், போதிய மழை இல்லாத காரணத்தாலும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 128.10 அடியாக உள்ளது. வரத்து 265கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 4288 மி.கனஅடி.

    வைகை அணை நீர்மட்டம் 52.98 அடி, வரத்து 447 கனஅடி, திறப்பு 869 கனஅடி, இருப்பு 2409 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.90 அடி, வரத்து 20 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.46 அடி, திறப்பு 6 கனஅடி.

    Next Story
    ×