search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி பிராட்டியூர் முத்துமாரி அம்மன் திருவிழா
    X

    திருச்சி பிராட்டியூர் முத்துமாரி அம்மன் திருவிழா

    • திருச்சி புங்கனூர்பிராட்டியூர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 200 மீட்டர் தொலைவிலும் பிராட்டியூர் துணை மின் நிலையத்திற்கு பின்புறமும் அமைந்திருக்கும் பகுதி ஆலங்குளம்.
    • இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் முத்துமாரி அம்மனுக்கு வருடந்தோறும் ஆவணி மாதத்தில் கிடா வெட்டுதிருவிழா நடத்துவது வழக்கம்.

    திருச்சி :

    திருச்சி புங்கனூர்பிராட்டியூர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 200 மீட்டர் தொலைவிலும் பிராட்டியூர் துணை மின் நிலையத்திற்கு பின்புறமும் அமைந்திருக்கும் பகுதி ஆலங்குளம். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இப்பகுதிக்கு வணிகம் செய்ய வந்தனர்.

    அப்போது தங்களுக்கு என்று ஒரு வாழ்விடம் வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட பகுதி இதுவாகும். இங்கு பெரும்பாலும் வணிகர்களே வசித்தாலும் காலப்போக்கில் பல்வேறு தரப்பினரும் குடியேறி தற்போது 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் முத்துமாரி அம்மனுக்கு வருடந்தோறும் ஆவணி மாதத்தில் கிடா வெட்டுதிருவிழா நடத்துவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரானா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் திருவிழா நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்து கடந்த மாதம் 28-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், நேற்று மாலை 6 மணிக்கு மேல் பால்குடம் மற்றும் அலகு போட்டு வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இன்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மதியம் 1 மணி அளவில் பொதுமக்கள் சார்பில் மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது.

    மாலை 3 மணிக்கு மேல் சாமி திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×