என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எதிர்கால சமுதாயத்தின் ஆணிவேர் ஆசிரியர்கள்- பாரதிபாஸ்கர் பேச்சு
  X

  எதிர்கால சமுதாயத்தின் ஆணிவேர் ஆசிரியர்கள்- பாரதிபாஸ்கர் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எதிர்கால சமுதாயத்தின் ஆணிவேர் ஆசிரியர்கள் என்று பாரதிபாஸ்கர் தெரிவித்தார்.
  • சௌடாம்பிகா கல்விக்குழு ஆசிரியர் தினவிழா

  திருச்சி:

  சௌடாம்பிகா கல்விக்குழுமம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தின விழாவினை சிறப்பாக நடத்தி வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் ஆசிரியர் தின விழா 'விதை-2022' என்ற நிகழ்வு துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கல்விக்குழும தலைவர் டாக்டர். எஸ்.ராமமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். மேலும் கல்விக் குழுமத்தின் செயலாளர் ஆர்.செந்தூர்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

  சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு பேசுகையில், எந்த சமூகம் ஆசிரியர்களை மதிக்கிறதோ அது வளரும் என்பதற்கு சௌடாம்பிகா கல்விக்குழுமமே சான்று. இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர் வேலை தான் மிகவும் கடினமானது. அத்தகையபணியை விருப்பத்துடன் செய்கின்ற வேண்டியவர்கள் தான். ஆசிரியர்கள் எப்போதும் கொண்டாடப்பட வேண்டும்.

  ஆசிரியர்கள் தான் எதிர்கால சமுதாயத்தின் ஆணிவேர் என்றும், விதைகள் (மாணவர்கள்) முளைக்கும் கால அளவைக் கணிப்பவர் ஆசிரியரே என்றும், மாணவர்களின் நினைவாற்றல், அறிவாற்றல், சமாளிக்கும் திறன் போன்றவற்றை அடையாளம் காண்பவர் ஆசிரியர் ஒருவரே என்றார்.

  விழாவில் சௌடாம்பிகா கல்விக்குழுமத்தில் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது, சௌடாம்பிகா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராஜாராமனுக்கு வழங்கப்பட்டது. மேலும் சௌடாம்பிகா கல்விக்குழும பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் கல்வி சிவகாமி விஜயகுமார் உட்பட பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். ஆலோசகர்

  விழாவில் சௌடாம்பிகா கல்விக்குழும பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் என 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவை சுமங்கலி செல்வராஜ் தொகுத்து வழங்கினார். துறையூர் சௌடாம்பிகா ஆண்கள் பள்ளியின் முதல்வர் நல்லசிவம் நன்றி கூறினார்.

  சௌடாம்பிகா கல்விக்குழுமம் தனது ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக நடத்திய ஆசிரியர் தின விழா 'விதை-2022' என்ற நிகழ்வில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசிய காட்சி. விழாவில் சௌடாம்பிகா கல்விக்குழுமத் தலைவர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×