search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டூரில் வெளியூர் செல்லும் பஸ்கள் நின்று செல்ல  வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு
    X

    காட்டூரில் வெளியூர் செல்லும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு

    • திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்கியமான பகுதியான காட்டூரில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க மறுக்கிறார்கள்.
    • தஞ்சாவூர் வழியாக செல்லும் பஸ்கள் காட்டூரில்இதுவரை பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை.

    திருச்சி ;

    முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டி.வி.எஸ். டோல்கேட்டிலும், 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பால்பண்ணை ரவுண்டானாவிலும் தஞ்சாவூர் வழியாக செல்லும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

    ஆனால் திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்கியமான பகுதியான காட்டூரில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க மறுக்கிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் 10:30 மணிக்கு மேல் காலியாக செல்லும் பேருந்துகளில் கூட பயணிகளை ஏற்ற மறுக்கிறார்கள். இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி காட்டூரில் பாப்பா குறிச்சி பஸ் தொடக்க விழாவிற்கு வந்த தங்களிடம் மனு அளித்தேன். தாங்களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தீர்கள். ஆனாலும் தஞ்சாவூர் வழியாக செல்லும் பஸ்கள் காட்டூரில்இதுவரை பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை. இதில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×